Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

ஆடிக்கூழ்

2 comments
ஆடிக்கூழ் என்பது யாழ்ப்பாணத்து மக்கள் மத்தியில் மிகப்பிரபல்யம் வாய்ந்த ஒரு உணவுப்பண்டமாகும். எம் ஊரில்  உள்ளவர்கள் மட்டுமல்லாமல் உலகம் எங்கும் பரந்து வாழும் நம் தமிழர்கள் இதை செய்து சப்பிடக்கூடும். 

உல்லாசப் பயணம் வருவோர்கள் அதிகம் விரும்பும் ஒரு உணவாகவும் இருக்கிறது.
ன்றைய காலங்களில் வருமானம் ஈட்டக்கூடிய ஒரு உணவு என்றால் அது மிகையாகாது.

இன்றைய நவீன உலகில் இது போன்ற பாரம்பரிய உணவுப் பொருட்களைச் செய்து சுவைப்பதற்கு நம்மவர்களுக்கு நேரமில்லை என்பதுடன் வசதிகளும் இல்லை என்பதே உண்மையாகும். இதன் காரணமாக பலர் இது போன்ற உணவுப் பண்டங்களின் 'மறக்க முடியாத சுவையை மறந்து விட்டார்கள்' என்று கூடச்சொல்லலாம்.

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தந் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
ஆடிக்கூழை செய்வதற்குத் தேவையான பொருட்கள்.
அரிசிமா - 1/2 கப்
பயறு - 1/4 கப்
தேங்காய்பால் - 2 கப்
பனங்கட்டி - 3/4 கப்
தேவையான அளவு தேங்காய்ச்சொட்டு, உப்பு மற்றும் தண்ணீர்

மிளகுத்தூள் தேவையான அளவு
சீரகத்தூள் தேவையான அளவு
ஏலக்காய் - தேவையான அளவு

செய்முறை

1. 
முதலில் பயறு மற்றும் அரிசிமாவை தனித்தனியாக வெறும் சட்டியில் போட்டு வறுக்கவும்.

2. 
சுத்தமாக கழுவிய பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவைத்து  வறுத்த பயறையும் சிறிதாக வெட்டிய தேங்காய்ச்சொட்டுக்களையும் அவிய விடவும் தண்ணீர் தேங்காய்ச்சொட்டையும் பயறுக்கும் மேலான அளவில் நின்றால் போதுமானது

3. பயறு ஓரளவு வெந்தவுடன் அரிசி மாவை தேங்காய்ப்பாலில் கரைத்து அதனுள் விட்டு மா கட்டிபடாமல் இருக்குமாறு அடிக்கடி கிளறவும்.

4. மா வெந்ததும் (கூழ் தடிப்பாகும்) அதனுள் பனங்கட்டி, உப்பு, தேங்காய்ச்சொட்டு ஆகியவற்றைச் சேர்த்து கிளறவும்.

5. அடுப்புச்சூட்டை இதமான வெப்பத்தில் விட்டு. அதற்குள் மிளகுத்தூள், சீரகத்தூள், கலந்து இறக்கும் போது ஏலக்காயைத் தட்டிப்போடவும்.

6. சுடச்சுட அருந்த சுவையான ஆடிக்கூழ் தயார்!





குறிப்பு - 



கூழை நன்றாக சூடு ஆறிய பின்னர் உண்டால் சிறிது சுவை குறைவாக இருக்கும். அதுமாத்திரமல்லாமல் வயிறு சம்பந்தமான நோய்களும் ஏற்படும்.  தேங்காய் சொட்டை போடுவதற்கு பதிலாக மச்சம் போட்டும் கூழ் செய்யலாம்.
Next PostNewer Post Previous PostOlder Post Home

2 comments:

  1. subramaniyam7:19:00 am

    மீன், ரெச்சி ரால் போடுற கூழ் எது? வெளிநாடு எண்ட ஒண்டுக்கு வந்து எல்லாம் போச்சு தம்பி.

    ReplyDelete
  2. அது மச்சம் போடுறதால பெயர் மச்ச கூழ்
    அதையும் ஒரு பதிவில் பதிய முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா