Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

A9 வீதி அகலிப்பும், பிரச்சனைகளும்..!

6 comments

இன்று எமது யாழ்ப்பாணத்தில் பாரிய அளவில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில்  ஒன்று வீதி அகலிப்பு. நீண்டகாலமாக அறிவிக்கப்பட்டு வந்த  வீதியின் அகலிப்புப் பணிகள் இப்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில்
பல்வேறு இடங்களில் முடிவுற்று இப்போது A9 யும் எட்டி பார்த்துள்ளது.
காப்பட் வீதியாக மாற்றப்படும் கண்டி யாழ்ப்பாண வீதியில் முதற்கட்டமாக, வீதியின் இரு மருங்கிலும் உள்ள மதில்களை அகற்றும் பணிக்கு முன்னேற்பாடாக, மாற்று மதில்களை அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சிறிய இடைவெளிகளில் குழுக்களாக வேலை செய்வதை காணக்கூடியதாக உள்ளது.

இதைவிட கனரக வாகனங்களின் துணையுடன், தற்போது இருக்கும் வீதியின் இருமருங்கிலும் அகழ்வு வேலைகளும் நடைபெறுகின்றன. இந்தப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கையில் மதவுகளும் புனரமைக்கப் படுகின்றது. இவை தனியார் நிறுவனதினால் செயப்பட்டு வருகின்றது.

நிறுவனமானது தனது நிறுவனங்களை இங்கே அமைத்து மக்களுக்காக சேவை வழங்குவதுடன், யாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க தவறவில்லை. 

வீதியோர மதில்களுக்கு உள்ளே, அகலிக்கப்படவிருக்கும் வீதியில் எல்லையில் புதிய மதில்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த மதில்கள் இலவசமாகவே கட்டிக்கொடுக்கப்படுகின்றன. இருப்பினும் அவை தரமானதாக இல்லை என சில தொழிநுட்பவியலாளர்கள் தெரிவித்தனர். கட்டும் வேலைக்கு பயன் படுத்தப்படும் கொங்கிரீற்   கல்லும், பூச்சு வேலையில் பயன்படும் கலவைகளும் தரம் குறைவானதாகவும் இருக்கின்றது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வீதி அகலிப்பு எல்லைக்குள் வரும் பல வீடுகள், கடைகள், நிறுவனங்கள், கோவில்கள் என்பனவற்றின் ஒரு பகுதியும் இந்த அகலிப்புப் பணியால் இடிக்கப்படும் சூழ்நிலை தோன்றியிருக்கிறது. இதனால், இங்கு உள்ளோர் / பயன் பெறுவோர் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்ப நிலையில் உள்ளதைக் காண முடிகிறது.

இவை நடை பெறுவதால், வாகனங்கள் அதிகம் பயணிக்கும் வீதி என்பதால் விபத்துகளும் இடம்பெறுகின்றன அனைத்தும் சாரதிகளின் கவனக்குறைவாலே அன்றி வேறு ஏதும் எல்லை. வேலை நடைபெறும் இடங்களில் அனைத்து விதமான சைகைகளும் இருந்தும் அதனை கவனிக்காது தமது பாட்டுக்கு செயற்படுதல் இதற்கான காரணங்கள் ஆகும். எனவே இந்த அபிவிருத்தி முடியும் வரையும் சாரதிகள் மிகவும் கவனத்துடன் நடக்கவேண்டியது கட்டாயம் ஆகும்.

இருப்பினும் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வீதி அகலிப்பு மற்றும் திருத்தப் பணிகள் எதுவும் நடைபெறாமல் இருந்துவந்த யாழ்ப்பாணத்தில், போருக்குப் பிந்ததிய சூழலில் திடீரென அதிகரித்த வாகன நெரிசலால் போக்குவரத்து நெருக்கடிகள் தோன்றியுள்ளன. இதனால் இந்த வீதி அகலிப்புப் பணிகள் யாழ்ப்பாணத்தின் போக்குவரத்து நெருக்கடிகளைத் தவிர்க்கவும், மாவட்ட அபிவிருத்திக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. எனவே எதிர்ப்புகள் இருப்பினும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். 


அன்புடன் sanjay தமிழ் நிலா
Next PostNewer Post Previous PostOlder Post Home

6 comments:

  1. Anonymous9:10:00 am

    unmaiyana pirachaikal than...

    ReplyDelete
  2. நன்றி நண்பா..

    ReplyDelete
  3. saravanapavan8:48:00 pm

    தற்போது நடக்கும் பிரச்சனைகளை எடுத்து கூறுவது சிறப்பான ஒன்றாகும்..

    ReplyDelete
  4. நன்றி ஐயா.....

    ReplyDelete
  5. நீங்கள் எழுதுவது உண்மையான பிரச்சனைகளே..

    ReplyDelete
  6. நன்றி நண்பா... அனைவருக்கும் நன்றிகள்

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா