Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

வீதியால் வந்தபோது ஒருகாட்சி நிறையவே பாதித்தது, அது போதை தெரிகிறது, உணர முடிகிறது காரணம் தான் தெரியவில்லை......



சித்திரை வெயில்
சிந்திய வெக்கையில்,
வீதியில் போன எனக்கு..
உச்சி நனைய
உள்ளங்கால் குளிர..
தென்றல் வருடினாள்...
வானத்து மகளோ மெல்ல
வந்து என் கள்ளமில்லா
உள்ளம் தடவினாள்....!!

வானத்தில் சிறகடித்தே
பறந்து போனேன்...
எனை மறந்தே நான்
போனேன்.......!!
மின்னலின் வெளிச்சத்தில்...
என் கண் பிடித்திட்ட
படம் தான் என்ன. ......???

பார்க்க முடியாத...
உணர்வுகளையே கலைத்த...
அந்த படம்....!!
வீதியின் ஓரம்..
கிடக்கும் அந்த மனிதன்
யார்....???
வெள்ளத்தில்
மிதக்கும் அந்த இளைஞன்
யார்.....????

விடைதேடி அருகில்
போனேன்...
புரிய புதிராயனேன்...
கை கொடுத்தேன்..
கால்கள் இல்லை..
தோள் கொடுத்தேன்....
முடியவில்லை.....!!
அந்த மரக்காலில்
வேகம் இல்லை.....

இதுவரை காணாத
முகம்...
போராளியோ என
நினைக்க தூண்டும்
அவன் கரம்....
சோர்ந்து போன
அந்த மனம்.....!!!

கைகளில் இருந்து
விடுபட்ட...என் கைகளை...
பற்றி...நன்றி சொல்ல
துடித்த உதடுகளை பார்த்து....
உள்ளத்தின் உணர்வுகள்
என நினைத்தேன்..
வாய் தடுமாறிய போது
போதையால் என
தெரிந்தது கொண்டேன்......

இந்த நினைவுடனே
புறப்பட்ட எனக்கு....
விடை தெரியா கேள்விகள் பல....

தமிழ்நிலா
நண்பர் ஒருவரின் தாயாரின் மரணவீட்டுக்கு சென்று வரும் சமயம்...  



நாலு  எழுத்து மரணம்
என்னை துரத்துகிறது..
ஆண்டு ஒன்று கடக்கையில்
அது என்னை நெருங்குகிறது..

படுக்கையில் என்னோடு 
படுக்கிறது...
நடக்கையில் நிழலாக
தொடர்கின்றது...

பிறந்து இங்கு வந்துவிட்டால்
இறந்து தான் போகவேண்டும்
அதற்கு இடையினிலே பலமுறை
இறந்து தான் ஆகவேண்டும்..

அம்மா அப்பா உறவினால்
இங்கு வந்தோம்..
தம்பி தங்கை உறவினை 
கொண்டு வந்தோம்..
மனைவியோடு மகளினை
இங்கு பெற்றோம்..
போகும்போது கொண்டுபோக
எதை எடுத்துக்கொண்டோம்..

நிலை இல்லா வாழ்வினிலே
நிலை தேடி அலைந்து விட்டோம்..
அன்பு மட்டும் நிலை என 
புரியாமல் நன்றிகளை மறந்துவிட்டோம்..

மது மாதுவில் பிடிப்பு வந்து
தலைகீழாய் நடக்கிறோம்..
பட்டு தெளிந்தபின் இனி
பட்டினத்தார் பிடிக்கும் என்போம்..

தமிழ்நிலா

முட்டாள்கள் தினம் ஒவொரு வருடமும் வரும் இளைஞர் யுவதிகளின் கொண்டாட நாளாகும். ஏன் முதியவர்களுக்கும் கூட.. பல பல வேடிக்கைகள் நடக்கும் தருணம் அது. பலருக்கும் பழகிப்போன விடயங்கள் தான். "ஏமாற்றுதல் ஏமாறுதல்"  படலங்கள் தான். எவை முற்றி பகிடிவதைகள் ஆகி விட்டன. 
Next PostNewer Posts Previous PostOlder Posts Home