குடபுலவியனார்,
புறநானூறு 18
நிலம் குழிந்த இடங்கள் தோறும் மழைநீர் தங்கி நிற்பதற்கான நீர்நிலைகளைப் (குளம், ஏரி போன்றவற்றை) பெருகுமாறு அமைத்தவர்கள், இவ்வுலகில் தம் புகழை நிலைநிறுத்தியவர்கள் ஆவர்; அவ்வாறு செய்யாதவர்கள் தம் புகழை நிலைநிறுத்தாமல் மறைந்தவர்கள் ஆவர். போரின் வெற்றியினை விட இது புகழினை தரும் என்கிறார் குடபுலவியனார்.
குடிநீர் தரம், அதன் அளவீடு, மற்றும் அதனைச் சுற்றியுள்ள சமூக-அரசியல் பரிமாணங்கள் குறித்து சமீப காலங்களில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக “மொத்த கரைந்த திண்மங்கள்” (Total Dissolved Solids – TDS) என்ற அளவுகோல், நீரின் தரத்தை எளிதில் புரிந்துகொள்ளும் ஒரு எண் அடிப்படையிலான முறையாக உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. குடிநீர் தனியார்மயமாக்கலையும், சந்தை சார்ந்த அணுகுமுறைகளையும் வடிவமைக்கும் ஒரு முக்கிய கருவியாக மாறியுள்ளது.

.png)

.png)
.png)
.png)