Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு
Showing posts with label தாய்நிலம். Show all posts
Showing posts with label தாய்நிலம். Show all posts

பண்டைய யாழ்ப்பாணம் என நினைத்தவுடன் பசுமையான வயல்கள், தென்னை மரங்கள், மழை, நீர்நிலைகள் மட்டுமல்லாமல், மழையையும் வெப்பத்தையும் இயற்கையாக எதிர்கொள்ளும் அழகிய பாரம்பரிய வீடுகளும் நினைவுக்கு வருகின்றன. முன்னர் சமூகத்தில் பெரிய குடும்பங்கள் ஒரே வீட்டில் பல தலைமுறைகளாக வாழ்ந்தன. அவர்களுக்கான அறைகள் அதிகம் தேவைப்பட்டன. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அறைகள் இருந்தாலும், வீட்டின் மையப்பகுதிகள் அனைவருக்கும் பொதுவானவையாக இருந்தன.


யாழ்ப்பாண தீபகற்பத்தின் புவியியல், நீரியல் மற்றும் சமூக-பொருளாதார அமைப்புகளில் “வெளிகள்” எனப்படும் தாழ்வான நிலப்பகுதிகள் மிகவும் முக்கியமான பங்கைக் கொண்டுள்ளன. குறிப்பாக தென்மராட்சி, வடமராட்சி மற்றும் வலிகாமம் ஆகிய பகுதிகளில் பரவலாகக் காணப்படும் இவ்வெளிகள், வெறும் நிலப்பரப்புகள் அல்ல; மாறாக அவை மழைநீரை சேகரிக்கும் இயற்கைத் தொட்டிகளாக, நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் உயிரியல் அமைப்புகள் மற்றும் பல்வேறு உயிரினங்களின் வாழ்விடங்களாக விளங்குகின்றன. 



யாழ்ப்பாணத்திற்கு அருகே செம்மணி என்னும் இடம் உண்டு, இது கண்டி வீதியில் நாவற்குழி - அரியாலைக்கு இடையேயான பகுதியாகும். இலங்கையின் உள்நாட்டு போரின் போது இடம்பெற்ற கொடூரமான மனித உரிமை மீறல்களின் சாட்சியாக இங்கு பல புதைக்குழிகள் இருக்கிறது. கிருசாந்தி படுகொலை வழக்குடன் பேசுபொருளாகின்றது. இது செம்மணி மனிதப் புதைகுழி என்று அன்றுமுதல் அழைக்கப்படுகிறது.

இணைய தளங்களில் இப்போது உதய சூரியன் கிராமம் பற்றி பிரபலமாக போடப்படுகின்றது. தலையங்கங்கள் விமர்சனமாக இருக்கின்றன. விமர்சனங்கள் விசித்திரமான உண்மைகளாக இருக்கின்றன மக்களை ஊமைகளாக்கி நடத்தப்படும் விபச்சாரம் - ஓர் ஏழைக் கிராமத்தின் அவலக் குரல்
Previous PostOlder Posts Home