Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு
Showing posts with label பயணக் கட்டுரை. Show all posts
Showing posts with label பயணக் கட்டுரை. Show all posts

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ஏராளமான பனைகள் உள்ளன. ஆரம்பத்தில் 70 இலட்சங்களுக்கு மேல் இருந்த பனைகள், உள் நாட்டுப் போர், கட்டடங்கள், வீடுகளின் பெருக்கங்கள், மின் வசதிகள், வீதி அகலிப்புகள் காரணமாக, செயற்கையாகவும், இயற்கையாகவும் அழிந்து 20 இலட்சங்களை அண்மித்துவிட்டது.
யாழ்ப்பாண வரலாற்று மிக மிக தொன்மையானது. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வரலாறு அல்லது தொன்மங்கள் இருக்கின்றது. அவை மிகச்சில இடங்களில் மட்டுமே இன்னும் அழியாது பேணப்படுகின்றது, அல்லது கொண்டாடப்படுகிறது. அதை இன்று வரை பேணிக்காக்கும் சமுதாயம் அருகிக்கொண்டு கொண்டு சென்றாலும், அந்த பழமையை கொண்டாடும் சமூகமும் எங்களுக்குள் இன்னமும் இருக்கவே செய்கிறது.
வடமராட்சி கிழக்கு கட்டைக் காடு மற்றும் வெற்றிலைக்கேணி பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலேயே தங்கி இருந்தனன்ர்.. அப் பகுதிகளில் மீள்குடியமர்வு செய்வதற்கான வசதிகள் செய்யப்படாமலே அவர்கள் மீள் குடியேற்றப்பட்டனர்.

30.01.2011 ஞாயிற்றுக் கிழமை மதியம் 1.30 அளவில் புறப்பட தயாரானோம், இருண்ட மேகமாக இருந்தாலும் வெயில் உடம்பை எரித்தது. வாழ்க்கையில் காணாத ஒரு இடத்தை காண ஆவலால் வெயிலின் உஷ்ணம் தெரியவில்லை...
Previous PostOlder Posts Home