Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு
எனக்கு சின்ன சின்ன கனவுகள் உண்டு, அவை எல்லாம் மாறிய பிறக்கு பூமி மீண்டும் பிறந்து விடும். 


நான் வாழும் போதே
இது மாற வேண்டும்..
நாளும் ஒரு கனவாவது
நிஜமாக வேண்டும் ...

பீரங்கி கொண்டு சேற்று
வயல் உழுதிட வேண்டும்..
கந்தக பூமியிலே சந்தனம்
விளைந்திட வேண்டும்..

ஆயுதம் ஏந்திய கைகளில்
புத்தகம் ஏந்திட வேண்டும்.
உயிர் எடுத்த தோட்ட இனி
பூ தூவ வேண்டும்..

சிறை சாலை மூடி நீ
நூல் சாலை ஆக்கு..
தளங்களை தகர்த்து
பள்ளிகளாய் மாற்று...

அணு உலையை மூடி
சோத்து உலையினை ஏற்று,
தினம் முழு நேர உணவு உண்டு
உன் பசியை ஆற்று...

ஒரு நாட்டு எல்லைக்குள்
ஏது ஒரு சண்டை..
ஒரு தாயின் மக்களாய்
வாழ்ந்து நீ காட்டு...

அயல் நாடு உன் சொந்தம்
யுத்தம் ஏனோ..
நாடுகள் தோறும்
நீ மங்களம் பாடு....!!

விஞ்ஞான அறிவுகள்
என்றும் உயிர் காக்க வேண்டும்...
மெஞ்ஞானம் மறவாமல்
உயிர் வாழ வேண்டும்...

ஓசோனில் துளைகளை
நீ நீக்க வேண்டும்..
உனோட ஆயுள் நூறு அல்ல
முன்நூறாக வேண்டும்...

ஜாதிகள் இல்லாத புது
உலகம் வேண்டும்...
அங்கே நான் மீண்டும்
பிறந்திட வேண்டும்....

மதங்கள் அது மடமை
அதை மறந்திட வேண்டும்..
எல்லா கடவுளும் ஒரு
மதம் என்று
வாழ்ந்திட வேண்டும்

வசை பாடும் மனிதர்
எல்லாம் கவி பாட வேண்டும்.
ஏழைகளின் வாசல்
திறந்திட வேண்டும்..
பணக்காரர் வேசம்
இனி போக வேண்டும்...

நாகரிக மோகம்
தள்ளி போக வேண்டும்..
காமம் இல்லா காதல்
என்றும் வேண்டும்...
தந்தையின் பேர் சொல்லும்
பிள்ளைகள் வேண்டும்..
பத்தினி பெண்கள் மட்டும்
உயிர் வாழ வேண்டும்........

தமிழ்நிலா

காற்றுவெளி february 2011
ஆடிக்கூழ் என்பது யாழ்ப்பாணத்து மக்கள் மத்தியில் மிகப்பிரபல்யம் வாய்ந்த ஒரு உணவுப்பண்டமாகும். எம் ஊரில்  உள்ளவர்கள் மட்டுமல்லாமல் உலகம் எங்கும் பரந்து வாழும் நம் தமிழர்கள் இதை செய்து சப்பிடக்கூடும். 

உல்லாசப் பயணம் வருவோர்கள் அதிகம் விரும்பும் ஒரு உணவாகவும் இருக்கிறது.

பனங்காய்ப் பணியாரம் என்று சொல்லும் போது எமது பாரம்பரியம் நினைவுக்கு வரும். ஏனெனில் எமது மண்ணுக்கே  உரித்தான பனை வளங்களில் இருந்து பெறப்படும் உணவு வகைகளில் இதுவும் ஒன்றாகும்

எம் ஊரில்  உள்ளவர்கள் மட்டுமல்லாமல் உலகம் எங்கும் பரந்து வாழும் நம் தமிழர்கள் இதை செய்து சப்பிடக்கூடும்.


அனைத்து நண்பர்களுக்கும் காதலர்தின வாழ்த்துக்கள்.

உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடபடுகிறது. காதலர் தினத்தை எடுத்துக்கொண்டால், அதற்கு அதிகமான எதிர்ப்புகள் உருவாகிவிட்டன. காதலர் தினத்தை கொண்டாடுவோர், காதலர் தினத்தை எதிர்போர் என இரு வர்க்கத்தினர்கள் உருவாகிவிட்டர்கள்.
நிஜமான அனுபவம் ஒன்று..


குடிகார கும்பல்
ஒரு தெருவோடு நிக்க
நான் அருகோடு போனேன்..
அவன் தள்ளாட்ட நடையில்
என் பின்னாலே வந்து
என்னை நையாண்டி பண்ணி
தன் விட்டுக்குள் போனான்...

முத்தத்தில் உருளும் பானை
அங்கு யுத்தத்தை சொல்லியது..
என் எண்ணத்தை கிள்ளியது..

பானையில் ஒட்டிய சோற்றில்
வியர்வையின் வாசம்..
வறுமையை சொல்ல,
அப்பன் உடம்பில் மதுவின்
வாசம் அவன் கொடுமையை
சொல்லியது...

மின்னி மின்னி எரியும்
கை விளக்கில் - பிள்ளை
கண்ணீரில் புத்தகம்
நனைகிறது...

அப்பன் மூச்சினில் 
விளக்கணைய அவள்
கல்வியும் சேர்ந்தே அணைகிறது.

தாயின் கன்னத்தில்
தந்தையின் கை தடம்...
அவள் மெல்லிய உடம்பினில்
அங்கங்கு செந்தடம்..

பிள்ளையின் உள்ளம் 
சொல்லியது..
வறுமையின் நிறம் 
சிவப்பென்று..

தமிழ் நிலா 
நண்பர்களுக்கு வணக்கம்...!!


எனது வலைப்பதிவு மற்றும் முகப்புத்தகத்தில் பிரசுரிக்கப்படும் கவிதைகளை எனது அனுமதி இன்றி தங்கள் பகுதிகளில் பிரசுரிக்கிறார்கள். அதுவும் யாரோ ஒருவன், தமிழ் நிலா, சஞ்சய் எனும் பெயர்களில் எழுதுவதை, அவற்றின் பெயர்களை நீக்கி தங்களுடயதகவே இடுகிறார்கள்.. என்னால் பெயர் குறிப்பிட்டு சொல்ல கூடிய சில உத்தமர்கள் மட்டுமே என்னை கேட்டு அதுவும் அதே பெயருடன் பதிகிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்..


மேலும் நான் சில நண்பர்களை வினாவ அவர்கள் தொடர்பை துண்டிக்கிறார்கள்.. ஏன் என புரியவில்லை.. அவர்களை பெயர் இட்டு குறிப்பிட விரும்ப வில்லை. "காதல் சாரம்" என்னும் தலைப்பில் எழுதிய ஒரு விடயம் அநேகரின் முகப்புத்தக பகுதியில் காண்கிறேன். அவற்றில் அநேகமானவற்றில் பெயர் நீக்கப்பட்டுள்ளது..


இதை எங்கு கண்டாலும் தெரியப்படுத்தவும்...

முகபுத்தக நெருங்கிய நண்பர்கள் இனிமேல் கவிதைகளை பிரசுரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளர்கள். அத்துடன் இவாறு நடப்பதை தெரியப்படுத்திய நண்பர்களுக்கும்.. இதுவரை எனக்கு ஆதரவு வழங்கி விமர்சனங்கள் தந்து ஊக்குவித்த அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள்...
நன்றி
Next PostNewer Posts Previous PostOlder Posts Home