Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

இரவு நிலவு
இரண்டும் அண்டத்தின்
இரைச்சலை உறுஞ்சி
முடித்திருந்தது..
ஒரு சிலவற்றைத் தவிர..

தெருவோர நாய்..
சில்வண்டுகளின் கூக்குரல்
சில அழுகைகள்..
இன்னும் சில புரியாத அல்லது
புரிந்துகொள்ள முடியாதவைகள்..

மழலையின் காலடி கொண்டு
கிறுக்கல் ஓவியத்தின் வழியே
குப்பி விளக்கின் புகையில்
வர்ணம் பூசப்பட்ட
சில நிழல்கள்..
திரும்ப முடியாத
மரணத்தின் முடிவைத்தேடி
சாவிதொலைத்த அந்த
ஒற்ரைப்பாதையின் ஓரத்து
போதைச் சேற்றில்
தெரிந்தோ தெரியாமலோ விழுந்து
வெப்ப உலகத்தின் கடைசி
நீர்த்துளியையும் குடித்து  செரித்துவிட்டு
மூர்ச்சை அற்று கிடக்கின்றன..
இந்த மனித நாற்றுக்கள்..

சில விடைகளுடன் பல கேள்விகளுக்காக..

தமிழ்நிலா

காற்றுவெளி May 2013


திரும்பிப்பார் மனிதா
உன் கடந்த காலத்தை அல்ல..
உன் பின்னே
ஓடி வந்துகொண்டிருக்கும்
எதிர்காலத்தை...

நிகழ்காலம் எப்போதோ
தோற்றாகிவிட்டது..
நிகழ்ந்தவை அத்தனையும்
உனக்கு எதிரானவையே..
இறந்தகாலம் எதிர்காலத்தை
கவர்ந்து கொள்கிறது..


திரும்பிப்பார் மனிதா
உன் கடந்த காலத்தை அல்ல..
உன் பின்னே
ஓடி வந்துகொண்டிருக்கும்
எதிர்காலத்தை...


தமிழ்நிலா
Next PostNewer Posts Previous PostOlder Posts Home