"கிபீர் குத்தப்போது, பொம்மர் அடிக்கப்போது, ஹெலி சுத்துது, சுப்பசொனிக் இரையுது... உள்ளுக்க ஓடுங்க... ஓடுங்க..." - இந்தச் சத்தம் கேட்டால் போதும், கையில் வைத்திருக்கும் சோற்றுத் தட்டோ அல்லது பாடப் புத்தகமோ அங்கேயே விழும். அடுத்த சில நொடிகளில் நாங்கள் இருப்பது வீட்டுக்குள்ளோ அல்லது முத்தத்திலோ அல்ல; மண்ணுக்கு அடியில் இருக்கும் அந்த இருட்டு அறைக்குள்ள. அதுதான் எங்கள் பங்கர்.
.png)