Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

யாழ்ப்பாணத்து திரைகள்

3 comments
சினிமா இப்போது உலகையே ஆக்கிரமித்துவிட்டது. இது எல்லாமலும் இருக்கலாம் படம் இல்லாமலா? அது முடியாது என்பதே இப்போதைய பதில். வயசு வேறுபாடு இல்லாமலே எல்லோரும் ஒன்றாக போகும் இரு இடங்களில் இதுவும் ஒன்று.
எது எப்படியாகிலும் யாழ்ப்பாணத்து கலாச்சாரத்தில் திரையரங்குகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அது பற்றி ஒரு நோக்கு...

1990க்கு முன்பு யாழ்நகரில் திரையரங்குகளில் படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். இந்தியாவில் ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகி குறைந்தது ஒரு மாதத்தின் பின்புதான் இலங்கையில் திரையிடப்படும். ஆனாலும் அப்போதே எமது யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்ட பல எம்.ஜி.ஆர், சிவாஜி திரைப்படங்கள் 100 நாட்களை கடந்து திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகுந்த லாபத்தை அள்ளிக்கொட்டியது. அதேவகையில் அதன் பின் ரஜனி, கமல் படங்கள். எப்போது விஜய் படங்களுக்கு தான் மௌஸ் அதிகம். இந்தியாவிலும் இலங்கையிலும் ஒரே தினத்தில் திரையிடப்பட்ட முதல் திரைப்படம் ரஜனியின் பாபா.

அன்று யாழ்நகரில் ராஜா, வின்சர், ராணி, மனோகரா, ரீகல், நாகம்ஸ், சாந்தி, லிடோ, வெலிங்கடன், ஸ்ரீதர், லக்ஸ்மி என அதிக திரையரங்குகள் கம்பீரமாக நின்றன. காரணம் ஒவ்வொன்றும் லாபகரமாகவே அன்று இயங்கின. ஆனால் இன்று முக்கியமான திரையரங்குகள் என்று பார்த்தால் ராஜா, மனோகரா, செல்லா, நாகம்ஸ் என நான்கு திரையரங்குகள்தான்.அதை விட வடமராட்சி, தென்மராட்சி பகுதிகளிலும் உண்டு. அதிலும் குறிப்பிட்டு சொல்வதென்றால் ராஜா, மனோகரா என இரண்டு திரையரங்குதான் பெரிய படங்களை திரையிடுபவை. 

தமிழகத்தில் திரையிடப்படும் நாளிலே இங்கும் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. வரும் வசூலில் படப்பெட்டி வாங்கிய தொகை, திரையரங்க செலவுகள் போனால் கையில் மிஞ்சுவதில்லை என்கின்றார்கள் யாழ்ப்பாண திரையரங்க உரிமையாளர்கள். இதனால் இப்போதெல்லாம் யாழ்நகர் வரும் புதுப்படங்கள் குறைவடைய தொடங்கியுள்ளன. 

யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை திரைப்படங்கள் மூன்று விதமாக திரையிடப்படுகின்றன. 

1 ) படப்பெட்டிகளை குறிப்பிட்ட விலைக்கு வாங்குவது 
2 ) விகிதாசார அடிப்படையில் வசூலை பங்கிடுவது 
3  ) திரையரங்கை விநியோகிஸ்தருக்கு வாடகைக்கு கொடுத்தல் 

இதுவரை யாழ்நகரில் அதிகம் திரையிடப்படுவது முதல் முறையில்த்தான்.இந்த முறையில் திரைப்படங்களை வாங்கி வெளியிடும்போது யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை இதுவரை வெளியான  படங்கள் பெரும்பாலும் லாபத்தை அள்ளிக் கொடுத்திருக்கின்றன. 

விஜயின் வேலாயுதத்தை மனோகரா, ராஜா என இரண்டு திரையரங்குகளும் எதற்க்காக கைவிட்டன?  வாகன பாக்கிங், இடவசதி போன்றவற்றை வைத்துப்பார்த்தால் மனோகராதான் யாழ் நகரின் சிறந்த திரையரங்கு. குறைந்த டிக்கட் கட்டணமும் இதற்க்கு ஒரு காரணம்.  திரையரங்கு வசதியாக இருந்தாலும் இங்கு சவுண்ட் சிஸ்டம் மிகவும் மோசம். ஆனால் ராஜா திரையங்கில் சவுண்ட் சிஸ்டம் மனோகராவை விட சிறந்தது.  

இங்கு தான் மூன்றாவது விடயம் அரங்கேறியது. விநியோகத்தர்கள், இம்முறை, வேலாயுதம் படத்தை தாமே வெளியுட்டு அதிக லாபத்தை அள்ள நினைத்தார்கள். அதனால், வசதிகள் குறைவாக உள்ள செல்வா திரையரங்கை  வாடகைக்கு அமர்த்தி படத்தை வெளியிட்டார்கள். 

தென்மராட்சியில் உள்ள பாலா திரையரங்கில் இந்த தீபாவளிக்கு ஏழாம் அறிவு திரையிடப்பட்டது விகிதாசார முறையில் வசூலை பங்கிடுவது ஆகும்.

முன்னதாக நீண்ட நாள் கழித்து வெளிவந்த திரைப்படம் 100 நாள் ஓடியதற்கும். இன்றைய திரைப்படங்கள் 30 நாள் ஓடவே கஷ்டப்படுவதர்க்கும் காரணம் திரைப்படம் வெளியான மறுநாளே கடைகளில் கிடைக்கும் திருட்டு vcd/Dvd யும், இணைய வசதிகளும் தான்.. இதையும் தாண்டி மக்கள் திரையரங்கிற்கு வந்து 30 நாட்கள் ஒரு திரைப்படம் ஓடுவதென்பது பெரிய விடயமே. இந்த 30 நாட்களும் திரைப்படம் ஓடினாலே யாழ்நகரை பொறுத்தவரை நல்ல வசூல் கிடைக்கும்.

தகவல்கள் இணையம்..எப்புடி 

அன்புடன் sanjay தமிழ் நிலா
Next PostNewer Post Previous PostOlder Post Home

3 comments:

  1. Anonymous8:29:00 am

    நல்லதொரு பதிவு தோழா

    ReplyDelete
  2. Anonymous7:43:00 am

    எல்லாமே இப்போது அருகி போய் விட்டது. friend

    ReplyDelete
  3. நன்றி அன்பு உள்ளங்களுக்கு...

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா