Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு


பேனா முனைகளில்
என் வலிகள்...
வலிகளில் தாகம்
இன்னும் ஒரு தடவை
மாறுமா இந்த
உலகத்தின் தலை எழுத்து ..??

இனங்கள்
மதங்கள்...
மொழிகள்,
சாதிகள்,
பேதங்கள்..
நாகரீகம்..

எத்தனை
எத்தனை

என்னால்
மாற்றமுடியவில்லை..
மடமைகளை
வளைக்க முடிந்தது
உடைக்க முடியவில்லை..

ஏனெனில்
நான் பாரதியில்லை..
இருந்தாலும்
எனக்குள் ஒரு பாரதி..

தமிழ்நிலா


காற்றுவெளி June 2012



வான புத்தகத்தில்..
எழுத்துகள் சிதறிக்கிடக்கின்றன..
நட்சத்திரங்கள்...
*****

நடுப்பக்கத்தில் வழமை போல்
சோக கவிதைகள் தான்..
அமாவசை இரவு..
*****

அட்டை பக்கத்தில்
அழகான தேவதையின் முகம் ..
நிலா...
*****

கவிதைகள் எழுதும்
முன்னுரை
அதிகாலைப்பொழுது..
*****

நீண்டு கொண்டு போகும்
ஏழு வரி கவிதை..
வானவில்...
*****

சின்ன சின்ன ஹைகூக்களின்
அணிவகுப்பு..
வெண் மேகங்கள்..
*****

இதோ கவிதைகளின் காதலன்
வருகிறான்..
சூரியன்..
*****

தமிழ்நிலா 13.02.2014

நிலாந்தன் ஈழத்தின் கவிதை மற்றும் பத்தி எழுத்தாளர். கவிஞராகப் பரவலாக அறியப்படும் இவர் இலக்கியம், அரசியல் தொடர்பாகக் கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதுபவர். ஈழம், அதன் பிரச்சனைகளை வித்தியாசமான முறையில் ஆராயுமொரு ஆராட்ச்சியாளரும் கூட...
என் பேருந்து பயணத்தின் நண்பர் ஒருவரின் கதை இது...



பருவம் ஆகிவிட வயதிருந்தும்
உன்மேல் எனக்கு அப்போதே காதல்...
பருவம் அடைந்தாய்
எல்லோருக்கும் சந்தோசம்..
எனக்கு மட்டும் கவலை..
எங்கள் கோட்டைக்குள்
குள்ளநரிகள் அன்று தான் வந்திருந்தன..

வான் சுற்றும் வண்டுகள் போல்
உன்னை மட்டுமே சுற்றிக்கொண்டிருந்தேன்..
களமுனையில் தோட்டாக்கள்
சிதறிக்கொண்டிருந்தன..
உன்னை பாதுகப்பதற்காய் என்
பார்வை தோட்டாக்களும் கூட...
எம் காதல் வலயமானது..
முட்கம்பி வலயமானது...

கவிஞர்களின் கற்பனைக்குள்
எட்டாதவள் நீ.. என்
கண்களுக்குள் மட்டும் எப்படி
காவியமானாய்...


எனக்கு நீ சாதாரணமானவள் தான்..
மற்றவா்களுக்கு என்
அசாதாரணமாய் தெரிந்தாய்..
மலராத மலர் உன்னை
சருகாக கசக்கிய அந்த
கயவன் யார் என சொல்லாமல்
ஏன் மறைந்தாய்....

அன்பே..

மீண்டுவிட்டோம்...
மீளவில்லை...
மீட்கவில்லை...
உன் காதல்களோடு
நான் மட்டும்...
மீட்டுக்கொண்டிருகிறேன்...
உன் நினைவுகளை மட்டும்...

தமிழ் நிலா

காற்றுவெளி May 2012

நீ வெறும் கனவுக்கு பிறக்கவில்லை..
நிஜத்துக்கும் வாழ்க்கைப்படவில்லை...
அதனால் கனவுகளை விட
நிஜத்தையே அதிகம் நேசி...
இருப்பினும் கனவு காண்பதை
நிறுத்திவிடாதே...
கனவுகள் தானே நிஜமாகின்றன...

உன் முடிவுகளை நீயே எடுக்கப் பழகிக்கொள்..
ஆனால் முடிவெடுப்பது கடினம்..
காரணம் முடிவுகள் நிரந்தரமானவை அல்ல...
உன் கனவுகளுடன்,
பெற்றோரின் சராசரி கனவுகள்
போட்டி போடுகின்றன..
முடிவில் எது ஜெயிக்கும் என்பது
யாருக்கும் தெரியாது...
சில நேரங்களில் இரண்டும் தோற்பதும் உண்டு...

வாழ்க்கை என்பது கண்ணாடி போல,
இலகுவில் உடைந்து விடலாம்...
சில நேரங்களில் மீண்டும் ஒட்டவைப்பது
முடியாமலும் போகலாம்...
எமது செய்கைகள் மீள
எமக்கே திரும்புவதும் உண்டு...
ஒருவனை அழவைத்தால்,
அவனை விட நாமே அதிகம் அழுகின்றோம்...

உறவுகள் தவிர்க்கப்பட முடியாதவை...
ஆண் பெண் உறவு என்பது
காதல் மட்டும் என்பது இல்லை...
உறவின் எல்லை நட்பையும் அடையலாம்..
காதல் நட்பில் தான் முடிதல் ஆகாது...
இரண்டையும் அலட்டிக்கொள்ளாதே..

மடமைகளும் பாகுபாடும் தான்
மிஞ்சிய சொத்துகள்...
ஜாதிகளும், மதங்களும் தான்
எமக்கு விட்டு சென்ற சீர்வரிசைகள்...
சமூகமே ஒன்றிணைந்திருக்கையில்
நீ மட்டும் என்ன செய்வாய்...
தட்டிக்கேட்டால் நீ தான் குற்றவாளி..
மௌனமாக இருந்தாலும் கூட....

உன்னை நினைத்து சிரிக்கின்றேன்...
உனக்காய் மட்டும்  அழுகின்றேன்..
இறப்பதற்காக மனிதன் பிறப்பதும் இல்லை,
பிறந்த மனிதன் இறக்காமலும் இல்லை...
உன்னை சுற்றி குழிகள்
போட்டி பொறமை துரோகம்...
நீயாக வீழா விட்டாலும்
விழுத்துவதற்காய் பல கைகள்...
மீள துக்குவதற்கு கையே இல்லை...
நம் கையே நமக்கு உதவி...

தடை தாண்டி  போகையில்
தடைகள் சிலவேளைகளில் தட்டுப்படலாம்..
ஆனாலும் தொடர்ந்து ஓடு..
தோற்றுவிடமாட்டாய்...

தமிழ்நிலா

முதல் முதலாக கப்பல் கட்டுமானத்தில் டைடானிக் மூழ்காத (Unsinkable) ஒரு கப்பலாக மிகவும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது. டைடானிக் கப்பல் விபத்து முதலும் கடைசியுமாக மூழ்கிய கடல் பயணத்தின் சோகமான பதிவாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.


உலகத்து கவிஞர்களே
உங்கள் பேனாவை
ஒருமுறை மூடிக்கொள்ளுங்கள்...

கலாச்சாரம் அழிகிறது,
தமிழனை காணவில்லை....

அங்கம் தெரிகிறது,
ஆடைகளை காணவில்லை...

காமம் கனக்கிறது,
காதலை காணவில்லை...

ஆசை அழைக்கிறது,
அன்பை காணவில்லை...

பாசம் நடிக்கிறது,
பண்பை காணவில்லை...

படித்தும் அங்கே
பணிவை காணவில்லை...

விஞ்ஞானம் வளர்கிறது,
மனிதாபிமானத்தை காணவில்லை...

உலகத்து கவிஞர்களே
உங்கள் பேனாவை
திறந்து கொள்ளுங்கள்...
காதலை பாடும் கைகளால்
காவியம் எப்போது தரப்போகிறீர்..???


தமிழ்நிலா
Next PostNewer Posts Previous PostOlder Posts Home