என் அறையினை நான் மிகவும் நேசிக்கிறேன்..
நான்கு சுவர்களுடன்,
ஒரே ஜன்னல்... ஒரே வழி...
எல்லாவற்றையும் போல் தான்..
இருப்பினும் எனக்கானது..
வாழும் போதே மரித்திட்ட
சிலரில் ஒருவன் நான்...
சில நொடிகளில்,
நீளும் நிமிடங்களில்...
அத்தனை கால அளவுகளிலும்...
இன்னும் எல்லாவற்றிலும்...
ஏதாவது ஒரு படம் செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட ஆசை, ஈழ சினிமா என்பது மிகப்பெரியது, அதில் எங்களுக்கு புரிதல்களுக்கு இடங்கள் குறைவு, எத்தனையோ ஆளுமைகள் கடந்து வந்த பாதை, இங்கிருந்து சென்று இந்திய சினிமாவில் சாதித்தவர்களும் உண்டு, அப்படியான இந்த சினிமாவில் எங்கள் உள்ளீடும் இருக்க வேண்டும் என்பது அவா,
இது நாங்கள் எடுத்த ஒரு குறும்படம் பற்றிய தகவல். இந்த காலப்பகுதியில், நடந்த குறிப்பிட்ட சம்பவத்தின் பாதிப்பில் உருவானது, இது எமது முதல் படைப்பு, இதற்கு சில விருதுகளும் கிடைத்தது.
அப்பாவினை பற்றி நிறைய சொல்லிக்கொண்டு இருக்கலாம், அப்பா ஆரம்பத்தில் நண்பனாயும், பின் எதிரியாகும், இறுதியில் ஹீரோ ஆகவும் மாறிப்போவார். அப்பா, அம்மா சொல்லி தான் தெரியவரும், அது போல தான் அப்பா பற்றிய கதைகளும்.
என்னில் நிறைந்துள்ள
கடதாசிப்பூக்கள்
உன் வார்த்தைகளின்
விசிறல்களில் மலர்ந்தவை
சிதறி ஓடிக்கொண்டிருக்கும்
சிலம்பின் பரல்களை
பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்..
தீயினை அணைக்க
இது போதாது தான்...
தீ படர்ந்தாகிட்டு..மேலுமாய்...
நாளொரு கனவின் முடிதலுடன்
ஆரம்பமாகிறது
ஒவ்வொரு காலையும்...