Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு
மதன் கார்க்கி (பிறப்பு: 1980) 
ஒரு அறிமுக தமிழ் பாடலாசிரியர் மற்றும் மெல்லினம் எனும் கல்விக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவர் கவிப்பேரரசு வைரமுத்துவின் புதல்வர்.

தாட்சாயணி என்ற புனைபெயரில் எழுதிக் கொண்டிருக்கும் பிரேமினி சபாரத்தினம் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதியவைகள், பல சிறுகதை, கவிதைப் போட்டிகளில் முதற் பரிசில்களைப் பெற்றிருக்கிறார்.

இணைய தளங்களில் பரவலாக பேசப்பட்ட செய்தி... உண்மையில் இவ்வாறான சம்பவங்கள் எங்கும் நடக்கின்றன... தடுக்க படவேண்டும்....



பாடசாலை போகாம நீ
நடத்துகிறாய் குடும்பம்..
வெள்ளை சீருடையே உன்
குழந்தையின் படுக்கை...

உன் தோழிமார் போகையில்
மறைந்திருந்து பாக்கிறாய்..
அவள் தூக்கும் புத்தகம்
சுமை என்றதாலா நீ 
குழந்தையுடன்
குடும்பத்தை சுமக்கிறாய்...

உன் அம்மாவின் பொட்டை
பறித்து தான் 
நீ வாழ நினைத்தாயா??
உன் கழுத்தில் கயிறேற 
அப்பாவின் கழுத்தில்
 மாட்டினாயா??

இளமையை பரீட்சிக்க
காதலில் காமத்தை கலந்தது விட்டாய் ....
மோகம் முடிந்ததும் நீ
முகம் மூடி அழுவதும் ஏனோ..

சிறு வயது திருமணங்கள் 
குறைந்துவிட்ட போதிலும்...
இளவயது கர்ப்பங்கள்
குறையவில்லை இங்கே....!!

விதம் விதமாய் காதல் வந்து
வயித்தினையும் நிரபிப்போக..
வாழ்க்கையினை காப்பாற்ற 
இங்கே குழந்தை
கிணத்துக்குள்ளும் நிரம்பிவிடும்...

தமிழ்நிலா

காற்றுவெளி May sp 2011 

டாக்டர் எல். மகாதேவன்
நன்றி மருத்துவம் 

முடி உதிர்தல் (Hair loss)

முடி உதிர்வதைத் தடுப்பதற்கு யஷ்டிமதுலேபம் என்ற மருந்து பயன்படுகிறது. அதிமதுரம் கடையில் கிடைக்கும். இதை மென்மையான தூளாக்கிக்கொள்ளவும்.
டாக்டர் எல். மகாதேவன்
நன்றி மருத்துவம் 

இளநரை என்பது பித்தம் சம்பந்தப்பட்ட விஷயம். பித்தப் பிரகிருதிகளுக்கு இளம் வயதிலேயே தலை நரைத்துவிடும். ஆனால் அதற்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. உணவில் கறிவேப்பிலையை நிறைய சேர்க்க வேண்டும். 
'அம்மா'  என்பது உலகிலுள்ள உன்னதமான வார்த்தைகளில் உயர்வான ஒன்றாகும். அந்த வார்த்தைக்கும் அந்த உறவுக்கும் எதையுமே ஈடாக வைக்க முடியாது. எதை வேண்டுமானாலும் இரண்டாக வைத்துக்கொள்ளலாம், அம்மா என்பது ஒன்றே.

வீதியால் வந்தபோது ஒருகாட்சி நிறையவே பாதித்தது, அது போதை தெரிகிறது, உணர முடிகிறது காரணம் தான் தெரியவில்லை......



சித்திரை வெயில்
சிந்திய வெக்கையில்,
வீதியில் போன எனக்கு..
உச்சி நனைய
உள்ளங்கால் குளிர..
தென்றல் வருடினாள்...
வானத்து மகளோ மெல்ல
வந்து என் கள்ளமில்லா
உள்ளம் தடவினாள்....!!

வானத்தில் சிறகடித்தே
பறந்து போனேன்...
எனை மறந்தே நான்
போனேன்.......!!
மின்னலின் வெளிச்சத்தில்...
என் கண் பிடித்திட்ட
படம் தான் என்ன. ......???

பார்க்க முடியாத...
உணர்வுகளையே கலைத்த...
அந்த படம்....!!
வீதியின் ஓரம்..
கிடக்கும் அந்த மனிதன்
யார்....???
வெள்ளத்தில்
மிதக்கும் அந்த இளைஞன்
யார்.....????

விடைதேடி அருகில்
போனேன்...
புரிய புதிராயனேன்...
கை கொடுத்தேன்..
கால்கள் இல்லை..
தோள் கொடுத்தேன்....
முடியவில்லை.....!!
அந்த மரக்காலில்
வேகம் இல்லை.....

இதுவரை காணாத
முகம்...
போராளியோ என
நினைக்க தூண்டும்
அவன் கரம்....
சோர்ந்து போன
அந்த மனம்.....!!!

கைகளில் இருந்து
விடுபட்ட...என் கைகளை...
பற்றி...நன்றி சொல்ல
துடித்த உதடுகளை பார்த்து....
உள்ளத்தின் உணர்வுகள்
என நினைத்தேன்..
வாய் தடுமாறிய போது
போதையால் என
தெரிந்தது கொண்டேன்......

இந்த நினைவுடனே
புறப்பட்ட எனக்கு....
விடை தெரியா கேள்விகள் பல....

தமிழ்நிலா
Next PostNewer Posts Previous PostOlder Posts Home