Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

இன்று எமது யாழ்ப்பாணத்தில் பாரிய அளவில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில்  ஒன்று வீதி அகலிப்பு. நீண்டகாலமாக அறிவிக்கப்பட்டு வந்த  வீதியின் அகலிப்புப் பணிகள் இப்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில்

இணைய தளங்களில் இப்போது உதய சூரியன் கிராமம் பற்றி பிரபலமாக போடப்படுகின்றது. தலையங்கங்கள் விமர்சனமாக இருக்கின்றன. விமர்சனங்கள் விசித்திரமான உண்மைகளாக இருக்கின்றன மக்களை ஊமைகளாக்கி நடத்தப்படும் விபச்சாரம் - ஓர் ஏழைக் கிராமத்தின் அவலக் குரல்
நாட்டை குழப்பிவரும் கிரீஸ் பூதம் காரணமாக எமது யாழ் நடந்த கொடிய நிகழ்வு.


கண்ணயர நான் வந்து
கால் நீட்டி கிடக்கையிலே..
கிரீஸ் பூதம் வருதென்று
கத்திக் கேக்கையிலே 
கண்திறந்து எழுந்துவிட்டேன்..

கேற்ஆல அவர் ஓட 
ரோட்டாலே சனம் ஓட
சப்பாத்துக்கால் ஓட..
துப்பாக்கி வேடிகேக்க..
இரவெல்லாம் பகலாக 
கண் இரண்டும் அடைகாக்க
கரண்ட் நிக்கும் என 
விளக்கு எடுக்க போகையிலே..

மரம் தாவும் கிரீஸ் பூதம்
மதில் தண்டி வரக்கண்டும் 
மனதாலே பயம் கொண்டு
மங்கை நான் பதுங்கவில்லை 

வந்தவன் தமிழன் இல்லை
அவன் நெஞ்சில் ஈரம் இல்லை..
கையில் கூர் இருக்கு..
குத்திவிடும் துணிவிருக்கு...

கதவை உடச்சு கால் ஒன்று
வருகையிலே - கையில் 
விறகெடுத்து விட்டு விட்டேன்..
என் உடலை காத்து விட்டேன்..

"கண் விழித்த நேரம் முதல் 
கண்ணயரும் வேளைவரை
பிறர்க்காகவே வாழும் 
பெண்ணினமே...

எழுந்திடு.. உன்னையே 
நீ காத்திடு...!!"

தமிழ் நிலா

உலக சனத்தொகை செக்கனுக்கு செக்கன் அதிகரித்து வரும் நிலையில் எமது இலங்கையின் சனத்தொகை அதிகரிக்கும் வீதத்தில் இருந்தாலும் குறைவாகவே இருக்கிறது. காரணம் பிரதானமாக யுத்தம் ஒன்றே. சிறு சிறு காரணங்களாக கொலை, விபத்துகள், இயற்கை அழிவுகளை கூறலாம்.

பல ஆண்டுகளாகப் பட்டினிப் பஞ்சம் தலைவிரித்தாடும் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவை, ஐ.நா.சபை “பஞ்சத்துக்கு இலக்கான பகுதி” என அறிவித்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆறு நிமிடத்துக்கும் ஒரு குழந்தை என ஒவ்வொரு நாளும் 250 குழந்தைகள் பட்டினிச்சாவுக்குப் பலியாகின்றனவாம்.
யாழ்ப்பாணம், அதை அண்டிய பிரதேசங்களில் உள்ள பல ஊர்களிலும் இன்று வேள்வி என்று அழைக்கப்படும் பசு, ஆடு, கோழிபோன்ற உயிரினங்களை பலியிட்டு வழிபாடு செய்யும் முறை ஒன்று என்றும் இல்லாத அளவுக்கு தற்போது விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றது.



போர்
========
போர் விட்டு சென்ற எச்சம்.
திரும்பிய இடம் எல்லாம் வடுக்கள்..!!


மீள் குடியேற்றம்
===============
இருந்த இடத்தில் இருத்துகிரார்கள்

மாடியில் அல்ல கோடியில்....!!


நிவாரணம்
===========
கொட்டிலுக்கு கூரை போட
வெய்யிலில் தகரத்துக்காய்..!!


வறுமை
==========
பசியின் முகவரி தேடினேன்
அங்கே வறுமை என்று இருந்தது....!!


பாசம்
=========
பிள்ளை இரவில் உண்ண
பகல் முழுதும் காய்கிறார்கள் ...!!


தொழில்
=========
சோத்தில் கை வைக்க

கடலில் மிதக்கிறார்கள் ..!!



ஏக்கம்
======
போனவர் வரும் வரை பெண்கள்
கடலில் கண்ணீரை கலக்கிறார்கள்...!!



கல்வி
======
அணைந்த விளக்கில் இருந்து வெளிச்சம்
குடிசையில் குழந்தை படிக்கிறது..!!


by sanjay தமிழ் நிலா...

(on 27.07.2011 @ கட்டைகாடு visit)
Next PostNewer Posts Previous PostOlder Posts Home