Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு


செய்வினையாய்
விலைவாசி...

திணறும் வாழ்க்கை
அத்தியாவசியப் பொருட்களில்
விலை உயர்வு...

ஏழைகள் வீட்டில் 
நிலாவுக்கு தான் இனி வேலை...
மண்ணெண்னைய் விலை ஏற்றமாம்..

மீண்டும் சூரியனுக்கு ஆபத்து..
சக்தியை உறிஞ்சபோகிரார்கள்...
மின்சாரம் விலை ஏற்றமாம்.....

விபத்துகளும் குறையவில்லை
பெற்றோல் விலை ஏற்றமாம்...

உரசல்களும் குறையவில்லை...
பேருந்து கட்டண ஏற்றமாம் 

தாசிகளும் குறையவில்லை...
மாப்பிளை விலையேற்றம்...

நாட்டில் விலை  ஏற்றம்...
தற்கொலைகளும் மீள் ஏற்றம்..
காசும் விலை  ஏற்றம்...
கண்ணீரில் உப்பும்  ஏற்றம்..
பாணும் விலை ஏற்றம்...
பட்டினி சாவுகளும் இனி ஏற்றம்...

தமிழ்நிலா

நண்பர்களுக்கு வணக்கம், மீண்டும் ஒருமுறை உங்களை இந்த 2 ஆவது குறும்கவிதைகள் ஊடாக சந்திக்கிறேன். நீங்கள் கொடுத்து வரும் சிறிய ஆதரவுக்கு பெரிய கடமைப்பட்டிருக்கிறேன்.

ப்போது ஊடகங்கள் எல்லாவற்றிலும் அதிகமாக பேசும் செய்தியாகவும், செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் எல்லோரையும் கலங்க வைத்திருக்கும் செய்தி மரீ கோல்வின் இன் படுகொலை.

வர் பற்றிய தகவல்களை நீண்ட நாட்களாக தேடி ஒருவாறு இன்றுதான் கண்டு பிடித்தேன். 2006 இல் நாங்கள் சாதாரணதரம் கற்கும் போது எமது தனியார் கல்வி நிறுவனத்தில் (பிறைற்றின்)  எமக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர். மிகுந்த ஆளுமை உள்ளவர்,
ஒரு நாள் ஒரு புத்தகம் கொண்டுவந்திருந்தார். அந்த புத்தகத்தின் பெயர் "எனக்கு மரணம் இல்லை" அதில் எழுதியவர் பெரிய ஐங்கரன் என்று இருந்தது.

மனிதாபிமானம்
என்ன என்பது நேற்றுவரை
எனக்கு தெரியவில்லை...

தெரிந்துகொண்டேன்

கற்பிணி பெண் ஒருவர்
நிற்கையில் அவளுக்காக
ஒதுக்கப்பட்ட ஆசனத்தில்
நாமே இருப்பதையும்....

கையில் குழந்தையுடன்
தாய் வந்தாலும் - இவள்
பெண்தானே என்று 
ஒருமுறை உரசி
கடந்து போவதையும்...

மனிதாபிமானம் என்று 
இன்று தான் அறிந்து கொண்டேன்...!

தமிழ்நிலா

வவுனியா - யாழ்ப்பாணம்
தனியார் பேருந்து
மாலை 4 .45
17-02-2012

காதலர் தினம் நெருங்கிவிட்டது. காதலர்கள் படு பிஸி யாக இருக்கிறார்கள். இருந்தாலும். இந்த காதலர் தினம் பற்றி பலருக்கும் பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்கும் தான். நண்பன் ஒருவன் கேட்டான். அதற்காக ஆராய்ந்தபொழுது ஒரு கட்டுரை வாசிக்க நேர்ந்தது.

STAR MEDIA WORKS இனால் இந்த 2012 காதலர் தினத்துக்காக எனது கவிதைகள் காணொளியாக வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நான் வரிகளை எழுதி இருந்தேன், பின்னனர் எமது நண்பன் தங்கநேசன் இதனை காணொளியாக உருவாக்கியுள்ளார். 
Next PostNewer Posts Previous PostOlder Posts Home