Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

இரவு நிலவு
இரண்டும் அண்டத்தின்
இரைச்சலை உறுஞ்சி
முடித்திருந்தது..
ஒரு சிலவற்றைத் தவிர..

தெருவோர நாய்..
சில்வண்டுகளின் கூக்குரல்
சில அழுகைகள்..
இன்னும் சில புரியாத அல்லது
புரிந்துகொள்ள முடியாதவைகள்..

மழலையின் காலடி கொண்டு
கிறுக்கல் ஓவியத்தின் வழியே
குப்பி விளக்கின் புகையில்
வர்ணம் பூசப்பட்ட
சில நிழல்கள்..
திரும்ப முடியாத
மரணத்தின் முடிவைத்தேடி
சாவிதொலைத்த அந்த
ஒற்ரைப்பாதையின் ஓரத்து
போதைச் சேற்றில்
தெரிந்தோ தெரியாமலோ விழுந்து
வெப்ப உலகத்தின் கடைசி
நீர்த்துளியையும் குடித்து  செரித்துவிட்டு
மூர்ச்சை அற்று கிடக்கின்றன..
இந்த மனித நாற்றுக்கள்..

சில விடைகளுடன் பல கேள்விகளுக்காக..

தமிழ்நிலா

காற்றுவெளி May 2013


திரும்பிப்பார் மனிதா
உன் கடந்த காலத்தை அல்ல..
உன் பின்னே
ஓடி வந்துகொண்டிருக்கும்
எதிர்காலத்தை...

நிகழ்காலம் எப்போதோ
தோற்றாகிவிட்டது..
நிகழ்ந்தவை அத்தனையும்
உனக்கு எதிரானவையே..
இறந்தகாலம் எதிர்காலத்தை
கவர்ந்து கொள்கிறது..


திரும்பிப்பார் மனிதா
உன் கடந்த காலத்தை அல்ல..
உன் பின்னே
ஓடி வந்துகொண்டிருக்கும்
எதிர்காலத்தை...


தமிழ்நிலா

இவர்கள் யார்..?
புயலை உருவாக்கக்கூடியவர்கள்..
தென்றலுடன் நடக்கிறார்கள்..
அலையாக எழுந்தவர்கள்
ஏனோ சலனமற்றுக்கிடக்கிறார்கள்...
சிறகடித்து பறக்கக்கூடியவர்கள்
தரையினில் நெளிந்து கடக்கிறார்கள்...
வெளிச்சம் படைத்தவர்கள்
இருட்டில் தவழ்ந்து செல்கிறார்கள்...

இவர்கள்...
ஒன்று பத்தாகி, பத்து நூறாகி,
நூறு ஆயிரமாகி, ஆயிரம் இலட்சமாகி,
இலட்சம் கோடியான பின்னும்..
தனியாகவே நடக்கிறார்கள்..

இமயம் இதயம் இரண்டையுமே
பாரமாக தான்  பார்க்கிறார்கள்...
வழி  வலி  இரண்டையுமே
எதற்காகவோ வெறுக்கிறார்கள்...

பலி பழி இரண்டையும் நேசிக்கிறார்கள்..
காதல் காமம் இரண்டையும் கலக்கிறார்கள்..
இப்படி எப்படியோ தடுமாறி நடுக்கிறார்கள்
ஒவ்வொரு நாட்டின் இளைஞர்களும்...

முகவரி இல்லாத முகவுரையுடன்
அலைந்து கொண்டிருக்கும் இவர்கள் தான்
எம் தேசத்தின் நாளைய தலைவர்கள்...

தமிழ்நிலா
காற்றுவெளி March 2013

உல‌கி‌ல் ‌கி‌ட்ட‌த்த‌ட்ட
இருபதா‌யிர‌ம் வகை
ப‌ட்டா‌ம்பூ‌ச்‌சிக‌ள் உ‌ள்ளனவாம்..
உன்னையும் சேர்த்து...

சூரியனை கண்டபின் பூக்கும் 
மலர்க்காடு போல்,
உன்னைக் கண்டபின் பூக்கிறது..
என் மனக்காடு...!



பூக்களும் பட்டாம்பூச்சிகளின் தேவதையும்..
காதலர் தினம் 2013

 By- தமிழ்நிலா
 Music Credit- U1
S.A.Nilaan இன் தயாரிப்பில், S.A.N Pictures வழங்கும், நம்மூரு தெருவோரம்...


தென்மராட்சியின் வரலாற்றில் இன்னும் ஒரு தடமாக பதிகிறது  நம்மூரு தெருவோரம்...பாடல். S.A.N Pictures S.A.Nilaan இன் முயற்சியில் உருவாக்கி இருக்கும் முதல் பாடல், யாழ் மண்ணுக்கு தென்மராட்சியில் இருந்து சமர்ப்பணம்.



புகழ் பெற்ற யாழின் இசை அமைப்பாளர் முரளி இன் இசையில் சஞ்சய் தமிழ்நிலா வின் இன் பாடல் வரிகளில் S.A.நிலான் குரலில் வெளியாகியிருக்கும் இந்த பாடல் நண்பர்களிடையே மிக்க வரவேற்பை பெற்றுள்ளது. 

Kuranku  Pictures இன் காணொளியினை அழகுற மாற்றி S.A நிலான் தொகுத்துள்ளார். தனது வேலைப்பழுவின் மத்தியிலும் சிறிது நேரம் ஒதுக்கி இசை தந்த இசை அமைப்பாளர் முரளி அவர்களுக்கும், Kuranku  Pictures க்கும் தொகுப்பில் உதவிய Ltr Lavan இற்கும் நன்றிகள்.


Music-Murali 
இசை - முரளி 
Lyricts-Sanjay Thamilnila 
வரிகள் - சஞ்சய் தமிழ்நிலா 
Singer-S.A.Nilaan
குரல் - S.A. நிலான்
Video - Kuranku Pictures 
வீடியோ - குரங்கு பிக்செர்ஸ்
Editing - S.A.Nilaan, Ltr Lavan
தொகுப்பு - S.A. நிலான் & Ltr லவன்
 S.A.N Pictures இன்  அடுத்த பாடல் விரைவில் வெளிவரும்...

அன்புடன் தமிழ்நிலா

உலகம் அழியும் ஆனால்
நாளை என்று யார் சொன்னார்கள்...

மாயன் சொன்னானா..
உன் மாமன் சொன்னானா..
நாளை உலகம் அழியும் என்று..?
மாயன் என்றால் மாயம்
மாயம் என்றால்
கண்கட்டி வித்தை தானே..
உன் கண்களைக் கட்டிவிட்டு
சொல்லவதெல்லாம் உண்மையா
நண்பனே...??

மாத நாற்காட்டியை
வருடம் ஒருமுறை மாற்றிவிடுகிறாய்
மாயன் நாற்காட்டியும் முடிந்துவிட்டது
அவ்வளவுதான். மாற்றிவிடு
உன்னையும் சேர்த்து...

பைபிள் சொல்கிறதாம்..
கீதை சொல்கிறதாம்..
குர்ரான் சொல்கிறதாம்..
யார் இல்லை என்றது..
நாளை என்று சொல்கிறதா...??
மனிதா
அழியத்தான் போகிறது
உன்னால் தான்... ஆனால்
நாளை இல்லை...

அழியப்போகிறது என்று
சொல்கிறாய்..
யாருக்காவது உதவினாயா...?
ஒரு நேர உணவு கொடுத்தாயா..?
இல்லைத் தானே..
உனக்கே தெரியும் அழியாது என்று...
வதந்திகளால் நீ
பிரபல்யம் அடைய நினைக்கிறாய்..
உலகம் உன்னை பார்த்து
சிரிக்கிறது..
அழிவது நீயா நானா என்று..
20-12-2012
11.55-11.59 PM


நாளை இன்றாகிவிட்டது..
இன்று நேற்றாகிவிட்டது...
எல்லாமே அப்படியே தான்...
மனிதா
நீ கூட...!!

21-12-2012
12.02 AM


தமிழ்நிலா
Next PostNewer Posts Previous PostOlder Posts Home