Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

இந்த வாழ்கை எப்படி ஆரம்பித்தது என்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, எப்படி முடியப்போகின்றது என்றும் தெரிந்து கொள்ளவும் முடிவதில்லை. ஆக எமக்கு கிடைத்த வாழ்க்கையை வாழ்வதற்கும் பல இன்னல்களை அனுபவிக்க வேண்டி இருக்கும்.


அன்று நீ இட்ட புள்ளி .
நேற்று நீண்டு வளர்ந்திருந்தது..
பின்நாளில் வளைந்துகொண்டிருந்தது...
மீண்டும் அந்த ஒற்றைப்புள்ளி
பிறிதொருநாளில் வளரலாம்.


போலிகள் கொடுத்து
காலிகள் நிரப்பப்ப..
சாலை எங்கிலும்
சோலையாய் மொய்த்தனர் 

மறைந்து திரிந்தவர்
உரிமை என்றனர்..
மறைந்தவர் கொண்டு 
உரிமை பேசினர்..?
மறந்து திரிந்தவர் 
உரிமை கேட்டனர்..

கொள்கை பேசியோர்
கொள்கை இழந்தனர்...?
கொள்ளை அடிப்பதற்காய்
வெள்ளை பூசினர்

வேட்டிகள் வந்தனர் 
சேலைகள் தந்தனர்...
நம் வாக்குகள் வேண்டி
பொய் வாக்குகள் தந்தனர்...

வீதிகள் வந்தன, மின்னும் வந்தது..
கற்பனை எல்லாம் சொற்களாய் வந்தது..
சொன்னவர் பின்னே வந்தவை எல்லாம் 
அன்றே போயின.. அன்றோடு போயின 

போனவர் வருவார், இல்லை 
அவர் பேரனார் வருவர்...
வருடங்கள் ஐந்து பறந்துடும் இங்கு..
மறக்காதே தம்பி அவைகள் விசஜந்து...

தமிழ்நிலா

ஒரு நிலா நாளில்
என் தேசம் களவாடப்பட்டது..
ஒன்றாய், ஒவ்வொன்றாய்,
எல்லாமுமாய்..


புரிதல்..
கண்ணீரில் தொடக்கி
புன்னகையிலும்..
புன்னகையில் தொடக்கி
கண்ணீரிலும்..
முடியலாம்...

ஒரு துளி மழை - பின்
மீண்டும் பிரபஞ்சம் ஆரம்பம்....

ஒரு மணியில் இருந்து
சில பருக்கைகளை பெற்றுவிட
எத்தனை போராட்டம்...
அவனி... ஆகாயம்...
இரண்டுக்கும் இடையில்...
தினம் தினம் போராட்டம்..

கால்வயிறு நிரப்ப
கால் வைத்து
காணாமலும் போய்விடுவார்கள்
அவர்கள்...

சேறு... சோறு...
இரண்டுக்கும் நடுவில்
ஓயாதொரு பெரும் போர்.
தண்ணீர் வேண்டி 
கண்ணீர் கொட்டும் எம் உழவர்
வாழ்வில் தினம் தினம்
போர்தான்...

இப்போது மிச்சம்..
எதுவுமில்லை..
உடைந்த நம்பிக்கைகள் மட்டுமே!
இறையிடம் இறைஞ்ச மட்டுமே
முடிகிறது எம்மால்...

பொங்கல்... இப்போதெல்லாம்..
கவலைகளின் பொங்கலாகவே
முடிந்துவிடுகிறது....

தமிழ்நிலா

காற்றுவெளி 2014


நடந்து போகையில்
கடந்திருந்தது ஒரு கல்..
அழைத்தது
கடவுளின் எச்சம் என்றது..

கல் எடுத்து சிலைவடித்து..
கருவறையில் சிறையிலிட்டு
கடவுள் என்று சொல்லிட்ட
கல்லின் எச்சம் அது...

Next PostNewer Posts Previous PostOlder Posts Home