Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப்ப பொருளாதார நெருக்கடி, பாதை பூட்டு, சாமானுகளும் விலை, தட்டுப்பாடு.  அதனால அம்மாவின் தாலி வித்துத்தான் பால்பக்கட் வாங்கினது எண்டு அப்பா அடிக்கடி சொல்லுவார்.

முந்தி காய்ச்சல் வாறது எண்டுறது சர்வசாதாரணம், எக்ஸாம் வருது எண்டாலோ அல்லது மாணவர் மன்றத்தில ஏதும் செய்யவேணும் எண்டாலோ கூடவே காய்ச்சலும் வரும். பள்ளிக்கூடத்தில காய்ச்சல் வரப்பண்ணவே ஐடியா எல்லாம் போட்டிருக்கிறம். ஏன் எண்டால் அம்மா தொட்டுப்பாக்கும் போது சுடவேணும்.


மறைந்துவரும் வீர விளையாட்டுக்களில் இன்னும் மறக்கப்படாத, அழிந்துவிடாத ஒரு விளையாட்டு மாட்டுவண்டிச் சவாரி. இப்போது வெகுவாக குறைந்து விட்டாலும், எமது வீர விளையாட்டானது இன்னமும் யாழ்ப்பாணத்தின் பல கிராமங்களில், வடமாகாணத்தின் சில மாவட்டங்களில்  துடிப்போடு நடைபெறுவது ஓரளவு ஆறுதலான விடயம்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலான நகரின் பிரதான வீதியோரங்களில் நிறைந்து காணப்படுபவை பாதீனியம். அழிக்க வேண்டும் என்று அனேகர் விரும்பியும், பலர் அழிக்க முயன்றும், அழித்தும்  இன்னும் அழியாது நிற்கும் இந்த பாதீனியங்கள் எங்கள் சமூகத்தின் சாபங்கள்.

முந்தி ஐஞ்சு மணி ஆச்சு எண்டால் "லன்ரேனுக்கு எண்ணெய் விடவேணும் " எண்டு வீட்டை பேச்சா இருக்கும். வீட்டை மட்டும் இல்லை எல்லா இடமும் தான். அப்ப உந்த சண்டை நேரம் கரண்ட் எப்ப நிக்கும் எண்டு தெரியாது, மாறி மாறி ட்ரான்ஸ்போமெருக்கு அடி விழுறதால திடீர் எண்டு கரண்ட் நிக்கும். அதனால அந்தக் காலத்தில் மின்சாரம் மீது முழு நம்பிக்கை வைக்காமல் மண்ணெண்னை அரிக்கேன் லாம்பினை அருகில் வைத்துக் கொள்ளுவார்கள்.
"மாடு வெட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை,
எங்கட ஊர் தேவைக்கு அளவான மாடுகளை வெட்டுங்கோ என்று சொல்லுறம்,"
நாட்டின் எல்லாப் பகுதியையும் சென்று அடைந்திருக்கும் இந்த செய்தி பலபேர் மத்தியில் வேறுமாதிரியாக வகையில் திசை திரும்பியுள்ளது. இது தமிழ் முஸ்லீம் போரும் அல்ல, இந்து இஸ்லாம் பிரச்சனையும் அல்ல, ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு முஸ்லீம் நண்பனாக இருப்பான், ஒவ்வொரு முஸ்லீமிற்கும் ஒரு நல்ல தமிழ் நண்பன் இருப்பான். ஆக,

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ஏராளமான பனைகள் உள்ளன. ஆரம்பத்தில் 70 இலட்சங்களுக்கு மேல் இருந்த பனைகள், உள் நாட்டுப் போர், கட்டடங்கள், வீடுகளின் பெருக்கங்கள், மின் வசதிகள், வீதி அகலிப்புகள் காரணமாக, செயற்கையாகவும், இயற்கையாகவும் அழிந்து 20 இலட்சங்களை அண்மித்துவிட்டது.
Next PostNewer Posts Previous PostOlder Posts Home