Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு
நகைகள் அழகுக்கு அணியும் காலம் போய்.... ஆடம்பரமாகி விட்டன.. குறைத்தால் அழகு.. கூட்டினால் ஆபத்து..



யார் பாத்தாலும் எனை 
பிடிக்கும் - என்னை
யார் பாத்தாலும் எனக்கு
பிடிக்கும்...!!

திருவிழாவில் எனை கண்டால்
சிலருக்கு கையரிக்கும்...
தரையினில் எனை கண்டால்
பலருக்கு கண்கூசும்....!!
பூட்டி வைத்தாலும் என்றும்
என் பெருமை குறையாது...
சேற்றில் போட்டாலும்
என் அழகு குறையாது....!!

நான் நிறைந்து போனால் - உன்
உயிருக்கு எமனாவேன்....
எனை குறைத்துப் போட்டால் - உன்
அழகுக்கு உரமாவேன்.....!!

தமிழ் நிலா 

கன்னிஇளம் பேடு
என்னும் வீடு வரவில்லை..
குள்ள நரி கூட்டம் இப்போ
வீதியில் வந்து நிக்கும்..

மேற்கில் விழும் ஒளியோடு
கருமை வந்து உலகை 
கவ்விபோக இங்கே இரவகிபோகும்..

சப்தமே அடங்கிப்போகும்..
இரவின் அரவம் 
தாண்டவமாடும்..

தெற்கில் இருந்து வடக்கு வரும் 
சுடலை குருவிகள் சத்தம்..
நாய்களின் ஊளை..
ஆந்தையின் அலறல்..
கழுகின் காத்திருப்பு..

படபடக்கும் மூச்சை
பரபரக்க வைக்கும்..

நினைக்கையில்
சிலிர்க்கும் காலமிது..
எட்டு மணியாகியும்
கூட்டை எட்டவில்லை இன்னும் ..

ஊர் சேவல் அழைக்கையில் 
போகும் பருவம் தான் இது 
இப்போ சேவல்களும் 
உறங்கிடும் நேரமிது...

நரி பிடித்ததோ..
ஓநாய் அடித்ததோ...

யாழ்பாணத்தில் சாவு
மலிந்த சாமான்..
அதிலும் கொலையும்
கற்பழிப்பும் நல்ல மலிவுதான்..

யமன் வந்து நடை பாதை
கடை போட்டான்..
பெட்டிக்கடை காரருக்கு
புழுத்த சந்தோசம்..

கடலில் கிடந்த பிணம்
தாக்க குழி தோண்ட அங்கே
சிதைந்த உடல் வருமாம்..
கிணறும் இப்போ ரத்தம் குடிக்கிறது..
கயிறும் இப்போ உயிரை எடுக்கிறது..

ரத்தத்தால் தினம் 
அச்சேறும் நாளேடுகளின்
தலைப்பு செய்தி 
கண்ணீரால் காவியமாகும்...
இந்த ஊரில் நாளை 
இது தான்  வருமோ...??

" காணாமல் போன பெண்
சடலமாக மீட்பு..."
Next PostNewer Posts Previous PostOlder Posts Home