
சிறு வயதில்
பெற்றோர்கள் பிரிந்தார்கள்,
ஒரு வயதில்
நண்பர்களும் மறந்தார்கள்,
மனம் மட்டும் போதும் என்ற
காதலன் கற்பமாக்க நினைத்தான்,
குணம் மட்டும் போதும் என்ற
கணவன் கொன்றுவிட துணிந்தான்,
என்னில் ஊனம் இருந்ததால்
காமுகன் தொட்டுவிட மறுத்தான்,
வளர்த்தவர்களும் என்னை
வரும் வழியில் வெறுத்துவிட...!!
கையில் காசின்றி
கன்னியாய் நான் இருந்தும்,
பிச்சைக்காரி வேசம் கொண்டு
தெருவெல்லாம் திரிகின்றேன்...
பேருந்தில் நான் ஏற
இறங்கடி என்கிறார்கள்...
வீடுகளுக்கு நான் சென்றால்
கள்ளி என கலைக்கிறார்கள்...
வெள்ளை தோல் இருந்து
அங்கம் நிறைந்திருந்தால்
விபச்சாரி ஆகியிருப்பேன்...
தம் பசி போக்க வரும்
பண புள்ளிகள் தரும் காசில்
என் பசியை போக்கியிருப்பேன்...
(ஊனம் ஒரு குறை அல்ல,
அது வாழ்வில் தடை அல்ல..!)
தமிழ்நிலா

உடல் எடை போட்டுவிடக்கூடாதே என்று படாதபாடுபட்டு பல கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்க்கும் பலர், அவர்களை அறியாமலேயே உடலை பருக்க செய்யும் உணவுகளையும் எடுத்துக் கொளவதாக கூறும்
ஈழத்தில் நல்லூர் இராச்சியம், வன்னி இராச்சியம், கண்டி இராச்சியம், கோட்டை இராச்சியம் என்று நான்கு அரசுகள், ஐரோப்பியர் வருகையின்போது, 1505 ஆம் ஆண்டில் ஆட்சி செலுத்திக்கொண்டிருந்தன.
இவற்றில், பல்லவத்தில் நல்லூரின் இராசதானி அமைந்திருந்தது.