Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு



போர்
========
போர் விட்டு சென்ற எச்சம்.
திரும்பிய இடம் எல்லாம் வடுக்கள்..!!


மீள் குடியேற்றம்
===============
இருந்த இடத்தில் இருத்துகிரார்கள்

மாடியில் அல்ல கோடியில்....!!


நிவாரணம்
===========
கொட்டிலுக்கு கூரை போட
வெய்யிலில் தகரத்துக்காய்..!!


வறுமை
==========
பசியின் முகவரி தேடினேன்
அங்கே வறுமை என்று இருந்தது....!!


பாசம்
=========
பிள்ளை இரவில் உண்ண
பகல் முழுதும் காய்கிறார்கள் ...!!


தொழில்
=========
சோத்தில் கை வைக்க

கடலில் மிதக்கிறார்கள் ..!!



ஏக்கம்
======
போனவர் வரும் வரை பெண்கள்
கடலில் கண்ணீரை கலக்கிறார்கள்...!!



கல்வி
======
அணைந்த விளக்கில் இருந்து வெளிச்சம்
குடிசையில் குழந்தை படிக்கிறது..!!


by sanjay தமிழ் நிலா...

(on 27.07.2011 @ கட்டைகாடு visit)


ஐயோ சிகரட்டா வேண்டாம்...!!


பொதுவாகவே சிகரெட் பிடிப்பது, உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம் என்று மருத்துவர்கள் உச்சரிகிறார்கள். நம்ம நாட்டிலையும் இதுக்கு என்ன பஞ்சமா? சின்னவயசு, பள்ளி காலம், வாழ்க்கை எங்கும் எந்த சிகரட் மோகம் தான்.  என்ன தான் இதில இருக்கு என்னா அடிச்சு பார் தெரியும்

இ. முருகையன் (ஏப்ரல் 23, 1935 - ஜூன் 27, 2009, கல்வயல், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்) ஈழத்தின் முன்னணிக் கவிஞர்களுள் ஒருவர்.

1950 முதல் கவிதை எழுதும் முருகையன் ஏராளமான கவிதைகள், சில காவியங்கள், மேடைப் பாநாடகங்கள்,
பொய் பேசுபவர்களோடு பழகவும், இணைந்து பணியாற்றவும், வாழவும் வேண்டிய சூழல் எல்லோருக்குமே நேரிடுகிறது.பொய் பேசுபவர்களிடம் அகப்பட்டு பணத்தையும், பொருளையும், நிம்மதியையும் இழந்து திரியும் மக்களைக் குறித்த செய்திகள் நாளேடுகளில் தினமும் இடம் பெறுகின்றன
இந்த உலகை காக்க புது படை அமைப்போம்.. வரும் கயவரை அழித்து பாதை அமைப்போம்.. பாதையினுடு அலையாய் முன்னேறுவோம்... உலகைக் காக்க...!!


வாடா என் நண்பனே
புறப்படுவோம்
இந்த உலகத்தை நாமே
துடைத்திடுவோம்...!!

அழியா கனளகளை
அழித்துடுவோம்
வரும் கயவரை கொன்று
புதைத்துடுவோம்....!!

அனாதை இல்லை இனி
நாம் உறவாவோம்.
எம் அன்பை கொடுத்து
அடிமையாவோம்....!! 

ஊனம் ஓரு குறையல்ல
புரியவைப்போம்.
அது வாழ்வில் தடையல்ல
உணரவைப்போம்......!!

சாதி மத பேதம்
சுட்டெரிப்போம்..
இனி ஓரு பாரதியாய்
உருவெடுப்போம்....!!

வானுக்கும் மண்ணுக்கும்
பாதை அமைப்போம்..
தடைகளை வைத்து
படியாய் கட்டுவோம்...!!

தமிழர் எம் கலாச்சாரம்
காத்திடுவோம்..
மேல் நாட்டு மோகத்தை
விட்டெறிவோம்...!! 

பெண்களை கண்களாய்
பாத்திடுவோம்...
அடங்க மறுத்தால்
நாமே அடக்கிடுவோம்...!!

நீதிக்காய் என்றும்
குரல் கொடுப்போம்..
நீதி கிடைக்காவிட்டால்
நீதிபதி ஆகிடுவோம்...!!
வார்தையால் எல்லாம்
கூறிடுவோம்......

கேக்க மறுத்தால்.......

ஆயுதம் எடுத்திடுவோம்
உலகைக் காத்து
புது யுகம் படைக்க .....!!

தமிழ்நிலா 
காற்றுவெளி January 2014

தற்கொலைகள் எமது யாழ் மண்ணில் அதிகரிக்கின்றன. யாழ் குடநாட்டில் கடந்த வருடத்தை விட இவ்வருடம் தற்கொலை செய்பவர்களின் தொகை அதிகரித்து காணப்படுவதாக யாழ் போதன வைத்தியசாலையில் உளநல சிகிச்சைப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் மத்தியில் யுத்தம் மற்றும் இடப்பெயர்வுடன் தொடர்புடைய உளவியல் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுவதாக அமெரிக்க மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிபிசி இல் வெளியான கட்டுரை இங்கே
இரவு படுக்க போகும்முன் உங்க பக்கத்துல பொத்தல்ல கொஞ்சம் தண்ணீர் வைச்சுகிட்டு படுங்க. காலையில் தூங்கி எழுந்தவுடன் அந்த தண்ணீர முடிந்தவரை குடிச்சுட்டு பின்பு உங்கள் வேலையை துவக்குங்கள். தண்ணீர் குடித்து ஒரு மணிநேரம் முடிந்து, உங்கள காலை உணவை சாப்புடுங்க. டி,காபி குடிக்கலாம்.

வைரமுத்து (Vairamuthu, ஜூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஐந்து முறை பெற்றுள்ளார்.நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலை பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் முன்பு இளையராஜவுடனும் , பின்னர்


அதிகமா பதிவுகள் போட வேண்டும் என்று ஆவல். என்ன போடுவது. எதோ ஒன்றை போடுறன்.

யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் அமைந்து இருந்த சங்கிலியன் சிலைக்குப் பதிலாக மறு சீரமைக்கப்பட்ட சங்கிலி மன்னனின் உருவச்சிலை 2011/08/03 அன்று காலை 7 மணிக்கு

யாழ்ப்பாணம் தற்போது அதிகமான பிரச்சனைகளை நிவர்த்தி செய்து அபிவிருத்தியில் போகிறது. ஆனாலும் என்றுமே மீள முடியாமல் சிக்கி தவிக்கும் ஒரு பிரச்சனை சீரற்ற மின்சார விநயோகம். நாம் அதிகம் சந்திக்கும் தற்போதைய பிரச்னை பற்றி ஒரு கண்ணோட்டம்.
Next PostNewer Posts Previous PostOlder Posts Home