யாழ்ப்பாணம் தற்போது அதிகமான பிரச்சனைகளை நிவர்த்தி செய்து அபிவிருத்தியில் போகிறது. ஆனாலும் என்றுமே மீள முடியாமல் சிக்கி தவிக்கும் ஒரு பிரச்சனை சீரற்ற மின்சார விநயோகம். நாம் அதிகம் சந்திக்கும் தற்போதைய பிரச்னை பற்றி ஒரு கண்ணோட்டம்.
என்னவோ எனக்கு தெரியவில்லை நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளின் போது துண்டிக்கப்பட்ட சீரான மின் விநயோகம் இன்று வரை ஒழுங்காக எமக்கு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்ப காலங்களில் லக்க்ஷபானவில் இருந்து நாம் மின்சாரம் பெற்றோம் என்று நம்ம முன்னோர் சொல்ல கேட்டிருக்கிறே. அப்போதெல்லாம் வறட்சி காலங்களில் மாத்திரம் மின்சார தடைகளை அனுபவித்தார்களாம். ஆனால் கடந்த இருபது வருடங்கள்ளாக நாம் இந்த சீரான மின்சாரத்தை பெறுவதில் அடிக்ககடி பிரச்சனைகளை முகம் கொடுக்கிறோம்.
யாழ்ப்பாணத்தின் இந்த மின்சார பிரச்சனைக்கான காரணம் என்ன வென்று ஆராய்வோம். யாழ்ப்பாணத்துக்கு மின்சாரம் தடைப்பட்ட போது சுன்னாகத்தில் ஒரு துணை மின்சார நிலையம் அதாவது எரிபொருள் கொண்டு மின்பிறப்பாக்கிகளை இயக்கி அதன் மூலம் மின்சாரத்தை வழங்கினார்கள்.இதன் ஆரம்ப கட்டம் சீரான சேவையை மேற்க்கொண்டது. அதற்கான காரணங்களில் ஓன்று அன்றைய நாட்களில் இங்கு அதிகளவான வீடுகள் மின்சாரத்தை பெறவில்லை. மற்றயது அவை புதிய இயந்திரங்களாக இருந்தன. அதைவிட வீடுகளில் மின் உபகரணங்கள் குறைவாகவே இருந்தன.

எனினும் கால போக்கில் மக்கள் பாவனை அதிகரிக்க அதிகரிக்க பிரச்சனைகளும் சேர்ந்தே அதிகரித்து எனவே மின்சார தேவைகள் அதிகரித்த வேளை அடிக்கடி மின்சார தடை ஏற்பட்டது.
அதற்கான காரணங்களை பார்ப்போமானால், அதிகரித்த தேவை அதிகளவு இருந்தாலும், இராணுவ முகாம்களுக்கு அதிக மின் தேவைப்பட்டது. அப்போது குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இரண்டு நிறுவனங்கள் இணைந்து ஓரளவு நிலைமையை சீர்செய்தன. Agrico என்ற நிறுவனம் 15MV மின்சாரத்தையும் Cool Air என்ற நிறுவனம் 13MV மின்சாரத்தையும் வழங்கிக்கொண்டு இருந்தன.
அதற்க்கான செலவுகள் அதிகமாக காணப்பட்டதால் அவைகள் 2006 ம் ஆண்டுடன் ஒப்பந்தந்தித்தில் இருந்து நீக்கப்பட்டு. பகுதியளவில் செயற்ப்பட புதிதாக Northern Power என்ற நிறுவனம் சேவையை வழங்க ஆரம்பித்தது ஆரம்பத்தில்15MV மின்சாரத்தையும் பின்னர் 30MV மின்சார அளவுக்கு அதிகரிக்கப்பட்டு ஓரளவுக்கு சீரான விநயோகம் மேற்கொள்ளபட்டது.
ஆனால் இந்த இயந்திரங்கள் ஏற்க்கனவே பாவிக்கபட்டவை என்பதனால் முழுமையான சக்தியை வழங்க முடியவில்லை மீண்டும் பிரச்சனைகள் முளைக்க தொடங்கின, இன்னும் பிரச்சனை தீரவில்லை.
ஏனோ தெரியவில்லை, குறிப்பாக மாணவர்களை பரீட்சை காலங்களில் சொல்லி வைத்தால் போல மின்சார தடை ஏற்ப்படுவது ஓர் சாபமாக யாழ்ப்பாண மக்களுக்கு இருந்து வருகிறது. உயர்தரம், சாதாரண தரம் எல்லாம் எம் மாணவர்களுக்கு இரவுகளில் சதா ரணமாகவே இருக்கிறந்து.
2006 ம் ஆண்டு இணைக்கப்பட்ட Nothern power பின்னர் 2011 முதல் மாதம் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டு மீண்டும் Agrico நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு Nothern Power இரண்டாம் ஒப்ந்தகாரராக கொண்டு யாழ்ப்பாணத்துக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின் தடை இரவில் சரி அது தான் போனால் போகட்டும் என்று பார்த்தல் அதிகாலையும் அதே நிலைமை தான் எத்தனை பேர் இதனால் பாதிக்க படுகிறார்கள் தெரியுமா???
தற்போது அனைத்து வங்கி செயற்பாடுகளும் கணணி மயப்படுத்தப் பட்ட நிலையில் மின்சார பிரச்னை மிகுந்த தலையிடியாகவே உள்ளது. வைத்திய சாலை நோயாளரும் மிகுந்த அவதிகளை நோக்க வேண்டி உள்ளது
இதற்கிடைல மின்சார சபையினரை கூட தொடர்புகொள்ள முடியாமல் உள்ளது. உயர் தர பரிட்சை நடைபெறும் எந்த நாட்களில் இது தற்போது உங்களின் கைகளில் விடப்படுகின்றது.
அன்புடன் sanjay தமிழ் நிலா
மாணவர்களுக்காக மின் விநியோகத்தை சீராக்கவும்.
ReplyDeleteமக்கள் சேவையே மகேசன் சேவை..
ReplyDeleteஇது அதிகாரிகளின் கவனத்திற்கு