
வி.எஸ்.துரைராஜா (V.S.Thurairajah) என்றால் யார் என்பது இன்றைய சமூகத்தினர்களுக்கோ, இளையவர்களுக்கோ தெரிந்திருக்க சந்தர்ப்பம் இல்லை. ஈழத்தின் பிரபல கட்டிடக்கலை நிபுணர் திரு. வி.எஸ்.துரைராஜா.
இலங்கைத்தீவில் கட்டடக் கலைத்துறையில் இவர் நாற்பதாண்டுகளுக்கு மேலாக தனது பணியை ஆற்றியுள்ளார். ஆஸ்ரேலியா சிட்னியில் வாழ்ந்து வரும் காலத்தில் டிசெம்பர் 14 ஆம் திகதி மறைந்தார்.
இலங்கைத்தீவில் கட்டடக் கலைத்துறையில் இவர் நாற்பதாண்டுகளுக்கு மேலாக தனது பணியை ஆற்றியுள்ளார். ஆஸ்ரேலியா சிட்னியில் வாழ்ந்து வரும் காலத்தில் டிசெம்பர் 14 ஆம் திகதி மறைந்தார்.
பிறப்பு - கல்வி - பணிகள்
யாழ்ப்பாணத்தில் நவாலியில் வேலுப்பிள்ளை சுப்பையா, தங்கச்சிமுத்து ஆகியோரின் எட்டுப் பிள்ளைகளில் ஒருவராகப் பிறந்தவர் தான் துரைராஜா. தனது 6வது வயதிலேயே தந்தையை இழந்தார். மானிப்பாய் கிறீன் மெமோரியல் பள்ளியில் ஆரம்பக் கல்வியைக் கற்றவர் பின்னர் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் உயர்கல்வியைப் பெற்றார்.
வி.எஸ்.துரைராஜா அவர்கள் இலங்கையில் கட்டடக்கலை பீடம் உருவாக்கப்படாத காலத்திலும் (1948 ) பம்பாயில் உள்ள சர் ஜேஜே கலைக் கல்லூரி (கட்டட வடிவமைப்பு பாடசாலையில்) மூன்றாண்டு கற்கையை பூர்த்தி செய்தார். கட்டட வேலைகள் திணைக்களத்தில் ஒரு கட்டக்கலைஞராக இணைந்து பணியாற்றிய போது, புலமைப்பரிசில் பெற்று லண்டன் சென்று அங்கு கட்டடக்கலைத் துறையில் பட்டய மற்றும் பட்டப்பின் படிப்புகளை மேற்கொண்டார். Diploma in Architecture (London) தகமையைக் பெற்றுக் கொண்டார்,
Chartered Architects, Sri Lanka தலைவராகவும் ஆகவும் "Thurairajah Assocoates " இன் Managing Director ஆகவும் இருந்தவர். Royal Institute of British Architects, Royal Australian Institute of Architects ஆகியவற்றின் அங்கத்தினருமாவார். Architecture and arts in Ceylon என்ற காலாண்டிதழை 1975 - 1983 வரை பதிப்பித்தவர் வி.எஸ்.துரைராஜா. ஈழநாடு பத்திரிகையின் 1973 - 1975 வரையிலான காலப்பகுதியின் தலைவராகவும் இருந்தவர்.
1964ல் தனியார்துறை நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து தனது கட்ட்டக்கலை ஆற்றலை மேலும் வலுப்படுத்திக் கொண்டார். இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள், ஆலயங்கள், மற்றும் சமூக முக்கிய கேந்திர அமைவிடங்கள் இவரது சிந்தனையால் தான் உருவானவை. இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட இடங்களிலும் கட்டிடங்களை அமைத்துள்ளார்.
இவர் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம், விஞ்ஞானபீடம், கணித,கணினி விஞ்ஞானப் பிரிவு கட்டடம், நுண்கலைப்பீடக் கட்டங்களையும், வட்டக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரி, சுபாஸ் விடுதி, சந்தைக்கட்டம், மற்றும் என்றும் பெயர் சொல்லகூடிய பொதுநூலகம், தந்தை செல்வா நினைவுத்தூபி (100 அடி), துரையப்பா விளையாட்டரங்கு, வீரசிங்கம் மண்டபம்(ஆறு மாடிகள்) உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் பல்வேறு முக்கிய கட்டடங்களையும் இவரே வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது நூலக உருவாக்கத்தில்...
1981 ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட பொது நூலகத்தை திருத்தாது அதன் பின் பக்கத்தில் ஒரு புதுக்கட்டிடத்தை முன்னிருந்த கட்டிடத்தைப் போல் கட்டுவதற்கு தீர்மானித்தது. அக்கட்டிடத்தின் கட்டிடக் கலைஞராக நியமிக்கப்பட்டவர் திரு.வி.எஸ்.துரைராஜா ஆவார்.
1984 ஆம் ஆண்டு யூன் மாதம் அக்கட்டிட வேலைகள் முடிந்தன. குறைந்தளவான நூற்தொகுதிகளுடன் நூலகம் மீள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 1988 ஆம் ஆண்டு ஆரம்பித்த யுத்தத்தில் புதிய கட்டிடமும், ஏற்கனவே எரிக்கப்பட்ட கட்டிடமும் பாரிய சேதத்துக்குள்ளாயின.

திரு.வி.எஸ்.துரைராஜாவினால் "The Jaffna Public Library Rises From Its Ashes" என்ற நூல் வெளியிடப்பட்டது. 2008 இல் இது சிட்ட்னியில் ஆங்கிலப்பதிப்பாக வெளியானது. யாழ்.பொதுநூலகம் அதன் சாம்பலில் இருந்து எழுகிறது.. என்பது இதன் தமிழ் ஆகும்.
- நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு அமைப்புக்குழுவில் இருந்த இவர், கொழும்பில் நடைபெற இருந்த நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டடை யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த செயற்பட்டவராவார். இவரது செயலகமே, நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு செயலகமாகவும் பயன்படுத்தப்பட்டது.
- ஈழத்து திரைப்படமான குத்துவிளக்கு இவரது தயாரிப்பிலேயே வெளிவந்தது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்
இவர் மறைந்தாலும். யாழில் உள்ள கட்டிடங்கள் இவா் பெயரை சொல்லிக் கொண்டே இருக்கும்.
அன்புடன் -sTn-
good
ReplyDeleteTamilan he is very nice person...
ReplyDeletePublic Building Designed by Architect Thurairajah in Jaffna
ReplyDeleteNDFC Building
DIG’s office
Medical Faculty – Jaffna University
Science Faculty – Jaffna University
Mathematics and Computer science building – Jaffna University
Academy of Fine Arts – Jaffna University
Technical Institute Campus – Vadducoddai
CMS Girls’ College
Subash Hotel
Co-operative Bank
Market Complex
Municipal Stadium
Jaffna Public Library
Veerasingam Hall
Selvanayagam Memorial Column
Thank you for your Comments
ReplyDelete@Jaffnaஇன்னும் பலவும் இருக்கலாம்
ReplyDelete