Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு


ஓ மனிதா..
தூங்குகிறாயா
தூங்குவது போல் நடிக்கிறாயா..??
தூங்குபவனை எழுப்பி விடலாம்..
உன்னை..???

சேரிகள் அழகாகின்றன
நகரங்களில் சாக்கடை ஓடுகிறது 
வீதிகள் நரகமாம் 
உன்னால் தானாமே...

பேருக்கு தானம் தாலி
போருக்கு பின் எல்லாம் மாற்றம்
பிள்ளைக்கு யார் அப்பா
தாய்க்கே தெரியாதாம்..
வீதி செல்லும் 
பெட்டை நாய்களுக்கு பாதுகாப்பு..
தெரு நாய்களாம்..??

யாழ்ப்பாணத்து சந்தையில் 
மரணங்கள் மலிவாம் 
கற்பழிப்புக்கு கொலை இலவசமாம்
அகால மரணங்கள் 
அடிக்கடி நடக்கிறதாம்..

காரணம் ....!!

கைசேரா காதலா..
எல்லை தாண்டிய காமமோ..
அடம்பரமோ, பழி வாங்கலா..
திட்டமிட்ட சதியோ இல்லை
முன் ஜென்ம பாவமோ..???
என்னவாயிருக்கும்..???
உன் பங்கு ஏதும் இதில் உண்டா..??

ஓ மனிதா...

வீட்டு தாம்பத்தியம்
வாகனத்துக்குள் நடக்கிறதாம்..
ஆஸ்பத்திரி வாசலிலே
கூட்டம் கனக்கிறதாம்.
சட்டமாகிறதாம்
சட்டவிரோத கருக்கலைப்பு...
உலக சனத்தொகை 
எழுநூறு கோடியாம்

திரையரங்க போஸ்டேர்க்கு
தினம் பாலாபிசேகமா???
ஒரு நேர உணவின்றி 
உலகம் எல்லாம் ஒரு கூட்டம்
நாளும் செத்து மடிகிறதே 
தெரியாதா..??
என்ன செய்யப்போகிறாய்..???

கோவில் கோவில் என்று
காசு கொட்டுகிறாய்..
இல்லாத கடவுளுக்கு 
எங்கிருந்து வரும் இரக்கம்..
யுத்தத்தில் புத்தம் எங்கே..
சண்டையில் சாமி எங்கே
யேசுவும் அல்லாவும் 
எங்கே போனார்களாம்..??

காவல் தெய்வம் என்றால்
காவலுக்கு தானே..
காவல் தெய்வத்துக்கே 
காவல் வைத்துவிட்டாய்..
இப்போ இங்கே
கடவுளையே
களவாடுகிறார்களே.. நீ
என்ன செய்ய போகிறாய்..??

புதிதாக திறக்கிறார்களாம் 
அநாதை எல்லம்களும்
முதியோர் இல்லங்களும்...
இருந்தும் அங்கே
முற்பதிவுகள் முடிந்து விட்டதாம்..???

வயல்கள் சம்பல் மேடாம்
பச்சை பூமிக்கு சம்பல் வண்ணம் 
எப்படி வந்தது..??
ஓசோனில் எப்படி ஓட்டை 
உன்னால் தானே மனிதா 
என்ன செய்யப்போகிறாய்...???

புதிதாய் கவிஞர்கள் 
வந்துவிட்டார்கள்...
தமிழுக்கே தட்டுப்பாடாம்..
இருப்பதை கொண்டு 
தடுமாறி எழுதுகிறேன்...

ஓ மனிதா
புதுவருடம் பிறந்து விட்டது...
தூங்கினால் எழுந்துவிடு...
நடித்தால் முடித்துவிடு...

காற்றுவெளி February 2012 

தமிழ்நிலா 
தமிழர் எம் கலாச்சாரம் விவாதத்துக்கு எடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளான காலம். கவர்சிக்காக நாகரீகமா....!!! நாகரீகத்தால் கவர்சியா....??? எதுவுமே புரியவில்லை....


புரட்டசி கவி பாரதியே
நீ எங்கே உள்ளாய்...
நான் சொல்லுகிறேன் கேளும்

அடுப்பூதும் பெண்களுக்கு
படிப்பெதற்கு என்று
ஒருவன் சொன்னான்...!!

அன்று பதில் நீ கூறினாய்
பெண்ணுக்கு சம அந்தஸ்த்து
இங்கே வேணும் என்று..!!

இன்று நீ வந்தால் சொல்வாய்
சேலை கட்டும் பெண்களுக்கு
மினி ஸ்கேட் எதற்கு என்று...

புதுக்கவியே இனி நீ
புதிதாய் பிறந்து வந்தால்
தற்கொலை செய்திடுவாய்....
உன் கண்ணமா கூட ஜீன்சோடு...!!!

தமிழ்நிலா
மல்லிகை ஆண்டு இதழுக்காக அனுப்பிய கவிதை.



னம் என்னும் மேடையிலே
பல நாடகங்கள் நடக்குதப்பா...
உணர்வுகளின் நாடகத்தில்
மனிதம் மட்டும் நடிக்குதம்மா..

திருவாளர் கோடீஸ்வரர்
தெரு ஓடு ஏந்துராறு..
ஆரோக்கிய நாதன் இங்கே
ஆஸ்த்துமாவில் இருமுறாரு..

எண்களை கண்டுபிடித்துவிட்டு
எண் சோதிடம் பாக்கிறாய்..
நீ கண்டது சரி என்று
எப்படி தான் நினைக்கிறாய்....??

புருஷனை கொன்று விட்டு 
விதவை என்கிறாய்.. 
அவளையும் தின்று விட்டு 
விபச்சாரி ஆக்குறாய்..

கணவனை விட்டு விட்டு 
கள்ளமாய் திரிகிறாய் ...
பிள்ளையை தனிய விட்டு 
அநாதை என்கிறாய்....

உடையார் வம்சத்துக்கு
கலப்பிலே ஒரு வாரிசு..
அப்பன் மாரிக்கு மூத்தது 
அந்தோணி, இளையது முகமது..

சாதி மதம் கலந்த பின்னும் 
பிரிக்கத்தான் நினைக்குறாய்..
சந்தோஷ வீட்டில் ஏன்,
தீயள்ளி வைக்கிறாய்..

நான் என்ற சொல்லை விட்டு 
நாம் என்று கூறி எந்த 
நாடகத்தை முடித்துவிடு.. இல்லை
நடித்து நடித்து மனிதம் செத்து
பிணம் தின்னும் கூட்டம் 
பிறந்துவிடும் இங்கு ..!!!

தமிழ் நிலா

என் இனிய தமிழே
உலகத்தில் கண்முளித்தேன்
வாய் திறந்தேன் "அ"
அம்மா
அது தான் முதல் வார்த்தை..

தலைவைக்க மடிதந்தாள்
என் தாய்.
நான் உறங்க தாலாட்டானாள்
தமிழ் தாய்...
நான் வளர தமிழ் தந்தாள்
கல்லூரித்தாய்

கண்முழித்த மகன்
மம்மி என்றான்...
போப் இசை கேட்டுக்கொண்டிருந்த
மனைவி அவன் காதில்
கொழுவிவிட்டு எழுத்து போனாள்...
வாசலில் தயாராக நின்றாள்
ஒரு வயதான அவனின்
ஆங்கில ஆசான் தமிழ் வேந்தன் 

இனிய தமிழ் இனி
என்னாகுமோ..???

தமிழ்நிலா

பொங்கல், தமிழர் பண்பாடிலே மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். நிகழ்வு என்பதை விட பண்டிகை என்பது சிறப்பானது. சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள்.

யாழ்.இலக்கியக்குவியத்தின் “நாம்” Facebook கவிதைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு 08.01.2012 அன்று காலை 9.00 மணியளவில் யாழ்.வைத்தீஸ்வரா கல்லூரி மண்டபத்திலே கவிஞர்வேலணையூர் தாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இன்று A R ரகுமான் இன் பிறந்தநாள். (அல்லா இரக்கா இரகுமான்) பிறப்பு: தை 6, 1966 சென்னை, தமிழ் நாடு, இந்தியா . புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.



இப்போதெல்லாம்
தினமும்
வாசலில் நிக்கிறேன்..
என் வீட்டை
தாண்டி செல்லும் 
தபால்காரனை எதிர்பார்த்து...

"அம்மா நான் சுகமாக உள்ளேன்
விரைவில் வருகிறேன் உன்னிடம்" 
என ஒரு வரி கடிதமாவது
வராத என்று...

என்னை மலடி என்றார்கள்
வலிக்காத நாட்களே இல்லை...
கடவுள் உருவில் 
கல்லை கண்டாலே
உன் அப்பா நேர்த்தி
வைக்காமல் போனதே இல்லை

தவமிருந்து பெற்றோம்
தரணிக்கே கொடுத்துவிட்டோம்..
கண் திறந்தான் கந்தன்
ஏன் கண்களை மூடி விட்டான்...

அழாத நாட்களே இல்லை..

நிச்சயம் ஒரு நாள்
வருவாய் என்ற நம்பிக்கையில்
மாலை இல்லாமல் உன் படம்..
என்றோ ஒரு நாள்
வருவாய் என்ற ஏக்கத்திலேயே
என் விடியாத பொழுதுகள்...

அன்புடன் sTn

காற்றுவெளி January 2012 


-----------------------------------------
தமிழ்நிலாவின் "அன்பு மகனே " நெஞ்சை பிழியவைக்கும் நல்லதொரு கவிதை 

Feb 2012 இல் விமர்சனம் - ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன் 

புதிய வருடம் பிறந்துவிட்டது. கடந்து வந்த வருடங்களில் எத்தனையோ இன்னல்களை மட்டும் அனுபவித்து வந்தோம், சந்தோசங்களை சிலர் அனுபவிக்காமலும் இல்லை. ஆங்கிலப் புதுவருடம் என்பது இன்னுமொரு பண்டிகை நாள் தான் எமக்கு. புதிய ஆண்டின் முதல் கவிதை.
Next PostNewer Posts Previous PostOlder Posts Home