Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

நேற்று ஒரு கனவு
மீண்டும் அதே யுத்தகளம்...

பகவத்கீதைகள்,
குர் ஆன்கள்,
பைபிள்கள்
பௌத்த ஆகமங்கள்
தான் உயிர் கொல்லும்
ஆயுதங்கள்...

போராடும் களங்களில்
ஜாதிகள், மதங்கள்
தான் வீரர்கள்...

பால்வீதியில்
நிலவினைப்போலே...
வான வீதியில்
பறவைகள் போல

நான் மட்டும் சுதந்திரமாக...
உலகத்தை விலக்கி வைத்துவிட்டு.....

தமிழ்நிலா


னக்கு சுதந்திரம்
வேண்டும்...

பிறக்கும் வரை
அடைபட்டு வாழ்ந்தோம்..
அது சுகம்..
வளர்கையிலும் அப்படிதான்..
வளர்ந்தபின்னும் அப்படிதான்...
இது சுமை

எல்லாம் முடிந்தது
சுதந்திரம் என்றார்கள்...
அடாவடிகளில்
ஆண்களுக்கு சுதந்திரம்...
ஆடைகளில்
பெண்களுக்கு சுதந்திரம்...
இது தான் கிடைத்தது...

பேனா முனை நோக்கிய
துப்பாக்கி முனைகள்...
சீருடைகளில் ரத்த கறைகள்..
நீண்ட பயணங்களில்
நிலகீழ் கண்ணிகள்...
எங்கே சுதந்திரம்..

வெள்ளைக்காரர்களிடம் இருந்து
கிடைத்தாகிவிட்டது..
கொள்ளைகாரர்களிடம் இருந்து..
எப்போ கிடைக்கும்..???

சுதந்திரம் கேட்டவர்கள்
தியாகிகள் ஆனார்கள்..
கம்பிக்கு பின்னால் பலர்
காணாமல் போனார்கள்...

கூட்டில் இருக்கும்
கோழிகளுக்கு சுதந்திரம்..
மந்தை ஆடுகளுக்கும் சுதந்திரம்...
காட்டு சிங்கங்கள்
வீட்டுக்குள் வந்ததால்
நாட்டில் இல்லை
என்றுமே சுதந்திரம்..

எனக்கு சுதந்திரம்
வேண்டும்...
எப்போ கிடைக்கும்..
இல்லை இல்லை..
எங்கே கிடைக்கும்..??

காற்றுவெளி March 2012 

தமிழ்நிலா
Next PostNewer Posts Previous PostOlder Posts Home