Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு


புரிதல்..
கண்ணீரில் தொடக்கி
புன்னகையிலும்..
புன்னகையில் தொடக்கி
கண்ணீரிலும்..
முடியலாம்...

ஒரு துளி மழை - பின்
மீண்டும் பிரபஞ்சம் ஆரம்பம்....

ஒரு மணியில் இருந்து
சில பருக்கைகளை பெற்றுவிட
எத்தனை போராட்டம்...
அவனி... ஆகாயம்...
இரண்டுக்கும் இடையில்...
தினம் தினம் போராட்டம்..

கால்வயிறு நிரப்ப
கால் வைத்து
காணாமலும் போய்விடுவார்கள்
அவர்கள்...

சேறு... சோறு...
இரண்டுக்கும் நடுவில்
ஓயாதொரு பெரும் போர்.
தண்ணீர் வேண்டி 
கண்ணீர் கொட்டும் எம் உழவர்
வாழ்வில் தினம் தினம்
போர்தான்...

இப்போது மிச்சம்..
எதுவுமில்லை..
உடைந்த நம்பிக்கைகள் மட்டுமே!
இறையிடம் இறைஞ்ச மட்டுமே
முடிகிறது எம்மால்...

பொங்கல்... இப்போதெல்லாம்..
கவலைகளின் பொங்கலாகவே
முடிந்துவிடுகிறது....

தமிழ்நிலா

காற்றுவெளி 2014
Next PostNewer Posts Previous PostOlder Posts Home