
உழைப்பின் வாசம்..
நினைவுகளின் பிசுபிசுப்பு..
அன்பின் பரிதவிப்புக்கள் மீதமிருக்க
அத்தனையும் சூனியமாய்..- கூடவே..
அடையாளம் ஏதுமற்ற நான்,
அடையாளம் கண்ட நீ..
இடைவெளி நெருங்காத
குறும் பயணத்தின்
நீண்ட நேரத்தின் கடை நொடி அது..
நீ, நான் இன்னும் ஏதோ ஒன்று..
எதிரில் நிறுத்தம்...
மீண்டும் பழகிய ஒன்று..
இருப்பினும் நின்று போன அதே
தரிப்பிடத்திலிருந்து
நீண்டு கொண்டது எம் பயணங்கள்...
தமிழ்நிலா