கடந்த 2016ம் ஆண்டு ஐப்பசி மாதம் 23ம் திகதி இணைய வழி மூலமான கலந்துணையாடலுடன் “சிறகுகள் அமையம்” எனும் பெயர் தெரிவுசெய்யப்பட்டு, தமிழ்ச் சமூகத்தில் நலிவடைந்து வரும் கல்விச் சூழலை நிலைநிறுத்திப் பேணுதல் எனும் நோக்கோடு இவ் அமையம் ஆரம்பிக்கப்பட்டது.
சிறகுகள் அமையத்தின் மகுடவாசகமாக "கல்விக்கான இலட்சியப் பயணம்" எனும் முன்மொழிவு வாசகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2017ம் ஆண்டு அமைப்பின் இலட்சணை தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறகுகள் அமையம் சட்டபூர்வமாக யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையின் சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் பதியப்பட்டது. அதன்படி சிறகுகள் அமையத்தின் பதிவு இலக்கம் NAD/DS/05/SIR/13/2017 ஆகும்.