Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

படிப்பகம் செயற்றிட்டம் - சிறகுகள் அமையம்

Leave a Comment

கடந்த 2016ம் ஆண்டு ஐப்பசி மாதம் 23ம் திகதி இணைய வழி மூலமான கலந்துணையாடலுடன் “சிறகுகள் அமையம்” எனும் பெயர் தெரிவுசெய்யப்பட்டு, தமிழ்ச் சமூகத்தில் நலிவடைந்து வரும் கல்விச் சூழலை நிலைநிறுத்திப் பேணுதல் எனும் நோக்கோடு இவ் அமையம் ஆரம்பிக்கப்பட்டது. 

சிறகுகள் அமையத்தின் மகுடவாசகமாக "கல்விக்கான இலட்சியப் பயணம்" எனும் முன்மொழிவு வாசகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2017ம் ஆண்டு அமைப்பின் இலட்சணை தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறகுகள் அமையம் சட்டபூர்வமாக யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையின் சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் பதியப்பட்டது. அதன்படி சிறகுகள் அமையத்தின் பதிவு இலக்கம் NAD/DS/05/SIR/13/2017 ஆகும்.


வறிய பாடசாலைகளின் தேவைகளைக் கண்டறிவதற்காக களப்பயணங்களை மேற்கொள்ளுதல் இவ் அமையத்தின் சிறப்பாகும். தனங்களப்பு, கிளிநொச்சி பூநகரி பிரதேசங்களில் காணப்படும் 6 பாடசாலைகள் இக்களப்பயணம் மூலம் கடந்த வருடம் இனங்காணப்பட்டது. 

படிப்பகம்

"படிப்பகம்" செயற்றிட்டத்தின் ஊடாக கற்றலுக்கு உதவியாக மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த நூல் நிலையம் இல்லாத ஆரம்ப பிரிவு பாடசாலைகளுக்கு நூலக திட்டத்தை ஆரம்பித்து புத்தகங்கள் கையளித்தல், அவற்றை பேணுவதற்கான தளபாட வசதிகளை ஏற்படுத்துதல், நூல்களை இரவல் பெறுவதற்கான பதிவேட்டினை வழங்குதல், தகவல் தொழிநுட்ப அறிவை மேம்படுத்த கணினிகளை வழங்குதல், அவற்றைக் கையாள அடிப்படை அறிவினை வழங்குதல், என சிறகுகளின் படிப்பகத்தின் திட்டங்கள் நீண்டு செல்கின்றது.

இதற்கான பிரதான ஆனுசரனையாளர்களாக Building Blocks நிறுவனத்தினர் செயற்படுகின்றனர்.



“படிப்பகம்” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட எமது பிரதேசங்களின் வறிய பாடசாலைகளான 

  • யா/ தனங்களப்பு அ.த.க.பாடசாலை,
  • கிளி/ பரமன் கிராய் அ.த.க.பாடசாலை, -பூநகரி
  • கிளி/ வினாசியோடை அ.த.க பாடசாலை - பூநகரி
  • கிளி/ நல்லூர் ம.வி 
  • கிளி/ சாமிப்புலம் அ.த.க பாடசாலை
  • கிளி/ கறுக்காய்தீவு ம.வி

போன்ற பாடசாலைகளுக்கு நூலகம் அமைத்து இத்திட்டம் 2017 இல்  ஆரம்பிக்கப்பட்டது. நூலகங்கள் அமைத்தல் மட்டுமின்றி அவற்றைப் பராமரித்தல், பாடசாலைகளுக்கிடையில் சுழற்சி முறையில் நூல்களை பரிமாறி வழங்குதல், தொடர்ச்சியாக புதிய நூல்களை பெற்று வழங்குதல் போன்றவற்றையும் சிறகுகள் மேற்கொள்கின்றனர்.


இதன் தொடர்ச்சியாக இந்த வருடத்தில் இன்னும் பல பாடசாலைகளில் படிப்பகம் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சமூக நலன் நிறைந்த திட்டங்கள் எம்மத்தியில் நிறைந்து காணப்படுகின்ற போதிலும் அதற்கான ஆதரவுகள் சிறிய அளவிலேயே இருக்கின்றன, இந்த இளைஞர்களின் முயற்சியில் நீங்களும் கைகொடுக்க விரும்பினால் சிறுவர் புத்தகங்களாகவோ அல்லது நூலக அலுமாரி, வாசிப்பு கதிரை மற்றும் மேசைகள் போன்றவற்றை தளபாட உதவியாகவோ வழங்கலாம், உங்களால் முடிந்தால் பண உதவிகள் அல்லது செயற்பாட்டாளர்களாக இணைந்து, இத் திட்டத்திற்கு மேலும் வலுசேக்க முடியும். 

இப்போது சிறகுகள் அமையத்தின் ஊடாக நூலக வசதிகள் இல்லாத பாடசாலைகளுக்கு சுழற்சி முறையிலான முறையில் நூல்களை வழங்குவதற்கான ஒரு தொகுதி நூல்கள் கப்பல் மூலமாக பெறப்படவுள்ளது. 

போக்குவரத்துக்கான நிதிப் பற்றாக்குறை நிலவிவருக்கின்றது. அதற்கு உதவக்கூடிய நண்பர்கள் தொடர்பு கொள்ளவும். குறித்த புத்தகங்கள் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு ஏற்ற படங்களுடன் கூடிய ஆங்கிலப் புத்தகங்களாகும்..

தொடர்புகளுக்கு
sirakukalinfo@gmail.com 
த.சுஜீவன் - 078 3257 558
பா.ஸ்ரீபவான் - 077 4943 113
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா