யாழ்ப்பாணம் நிலத்தடி நீரைத் தமது குடிநீருக்கான பிரதான ஆதாரமாகக் கொண்ட ஒரு தனித்துவமான பிரதேசமாகும். வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் மற்றும் தீவக பகுதிகளில் வெட்டு அல்லது கட்டுக் கிணறுகள் பரவலாகக் காணப்படுகின்றன. ஆரம்பகாலங்களில் ஆலயங்களில் கிணறுகள் போன்ற நீராதாரங்கள் காணப்பட்டன.