Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

பஞ்சத்தின் இலக்கு சோமாலியா...!!

14 comments

பல ஆண்டுகளாகப் பட்டினிப் பஞ்சம் தலைவிரித்தாடும் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவை, ஐ.நா.சபை “பஞ்சத்துக்கு இலக்கான பகுதி” என அறிவித்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆறு நிமிடத்துக்கும் ஒரு குழந்தை என ஒவ்வொரு நாளும் 250 குழந்தைகள் பட்டினிச்சாவுக்குப் பலியாகின்றனவாம்.
சிலர் எதுவும் புது நோய் அங்கு பரவியுள்ளதா எனவும் கருத கூடும்.. ஆனால் இக் குழந்தைகளின் இறப்புக்கு காரணம் பட்டினி, என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும்..

சோமாலியா மட்டுமல்லாமல், இப்பகுதியில் உள்ள எத்தியோப்பியா, கென்யா, உகாண்டா போன்ற நாடுகளில் வாழும் மக்களும் நீண்ட காலமாக வறுமையின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகச் சிதைந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு உணவுப் பொருட்களுக்கான விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது. அன்றாட உணவுக்கே குழந்தைகள் கஷ்டப்படும்போது, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட ஏனைய அடிப்படை வசதிகள் எப்படி கிடைக்கப் போகிறது..

சோமாலியா, கென்யா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 20 லட்சம் பேர் உள்ளனர். இதில் 50 000 மேற்பட்ட குழந்தைகள் சரியான ஊட்டச்சத்து இன்றி ஆபத்தான நிலையில் வாழ்கின்றனர். மொத்தமாக ஒரு கோடியே 13 லட்சம் பேர் பட்டினி கிடப்பதாக ஐ.நாசபை தகவல் தெரிவித்துள்ளது. 

இங்கு குற்றங்கள் அதிகரிக்க, ஏழ்மையும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இதனால் இந்நாடுகளில் ஏழ்மையும், ஏற்றத் தாழ்வுகளும் நிறைந்து உள்ளன. வறுமை இருக்கும் வரை வன்முறையையும், குற்றங்களையும் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

நாட்டின் பெரும் பகுதியை தீவிரவாத அமைப்புகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து வெளிநாட்டு உதவிகளை ஏற்க மறுக்கிறார்கள். அதையும் மீறி தொண்டு நிறுவனங்கள் உணவு போன்றவற்றைக் கொடுத்து உதவி செய்தால், தொண்டு நிறுவன ஊழியர்களைச் சுட்டுக் கொல்கிறார்கள். எனவே, ஐ.நாசபை உள்ளிட்ட எந்தத் தொண்டு நிறுவனங்களும் அவர்களுக்கு உணவு வழங்க முடியவில்லை.

ஆயுதங்களுடன் பத்துப் பேர் சேர்ந்தால், அவர்கள் ஒரு தனிப்பிரிவாக மாறி நாட்டாமை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். அரசு இல்லை, சட்டம் இல்லை, ஒழுங்கு இல்லை, எதுவுமே இல்லாத நிலையில் சோமாலியா உருக்குலைந்து போய்க் கிடக்கிறது.

வறுமையினால் கைகளில் துப்பாக்கியுடன் கடல் பகுதியைச் சுற்றி வரும் சோமாலியக் கொள்ளையர்களால், உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.

உலகநாடுகள் ஒன்றிணைந்து, உடனடியாக 2,500 கோடி உதவி செய்தாலன்றி…. சோமாலியா பிழைக்க வழியில்லை என்கிறார்கள். அணுஆயுதம், போர் கருவிகள்,  என அநியாயமாகச் செலவிட்டு வரும் பணக்கார நாடுகள் நினைத்தால். ஒரே இரவில் சோமாலியாவை பசித் துயரத்திலிருந்து மீட்க முடியும். செய்ய நினைப்பார்களா அவர்கள்? இல்லை எப்போதும் ஒரு நாட்டை வீழ்த்த நினைப்பது. மக்களை கொன்று குவிப்பது. இல்லை அடக்கி ஆள்வது தான் நோக்கம்.


Make a donation to UNICEF's East Africa Children's Crisis Appeal

இந்த ஆபத்தில் இருந்து, குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு, யுனிசெப் unicef'' நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, பல்வேறு முகாம்கள் மூலம் குழந்தைகளுக்கு தேவையான பால், குடிநீர், சுகாதாரம் போன்ற வசதிகளை வழங்கி, உயிர்க்கொல்லி நோய்கள் பரவாமல் காப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. பசியால் வாடும் குழந்தைகளின் பேரிடரை துடைப்பதற்கு உதவுமாறு, "யுனிசெப்' வேண்டுகோள் விடுத்துள்ளது. 

உதவி செய்ய விரும்புவோர் 
http://www.unicef.org.uk/landing-pages/hornofafricaweb/ என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் "யுனிசெப்' அறிவித்துள்ளது.

உங்கள் உதவிகளையும் வழங்குங்கள்... அன்புடன் தமிழ் நிலா 
Next PostNewer Post Previous PostOlder Post Home

14 comments:

  1. muyanral mudiyum...
    pancham theerum..

    ReplyDelete
  2. http://www.unicef.org.uk/landing-pages/hornofafricaweb/

    ReplyDelete
  3. Anonymous7:53:00 am

    உதவிகரம் நீட்டுங்கள்...

    ReplyDelete
  4. Niroja Ravibalachchandran7:55:00 am

    uthavi seivomaa

    ReplyDelete
  5. Niroja Ravibalachchandran7:55:00 am

    ippadiyaana nalla vidayankala matravankalukkuththeriyappaduththathum... good da

    ReplyDelete
  6. athu than acca ennala mudinthathu..

    ReplyDelete
  7. Niroja Ravibalachchandran7:56:00 am

    kandippa da ithuve periya vidayam thaan

    ReplyDelete
  8. நன்றி அக்கா

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா