Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு


உலகத்தின் அதிசயங்களை அழிக்க வந்த சுனாமி ஒரு அதிசயம்..
உயிர் இழந்த உறவுகளுக்கு ஒரு நிமிடமேனும் அஞ்சலி செய்வோம் கவியோடு.. 



உன் அழகை பாட வந்தவனை
பாய்ந்தோட விட்டு விட்டாய் ..
ஓய்வெடுக்க வந்தவனை
உன் வீடு கூட்டி சென்றாய்..
சாதி சனம் பாக்காம நீ
தரையோட இழுத்து போனாய்...!

கடலம்மா கடலம்மா

உன் உடம்போடு உள்ள
உப்பு போதலையா..
கண்ணீரில் உப்பெடுக்க
கரைக்கு நீ வந்து விட்டாய்....!

உன்னோடு வாழும்
உயிர் கூட்டம் போதல என்றா
எம் உயிர் எடுக்க நீ
விரைந்து வந்தாய்....
உயிரற்ற உடம்பை விட்டு போகாம
அதைகூட உண்டு
உன் பசி போக்கிவிட்டாய்...!

கண் விளிக்கா நேரத்தில்
கடலே நீ வந்துவிட்டாய்...
பாயோடு எம்மை கொன்று விட்டாய்...
தொட்டிலில் கிடந்த பிள்ளையை
மாடத்தில் கொழுவ வைத்தாய் ..!

உற்றவளை காப்பாற்ற
பெற்றவளை இழுத்து விட்டாய்..,
மரத்தில் நான் ஏற மரத்தை
நீ முறித்துக் கொண்டாய்...!

உன் செல்வம் எடுத்ததாலா
எம்மை நீ பகைத்துவிட்டாய் ...
உன் அழகை ரசித்ததாலா
நீ எம் உயிரை பறித்துவிட்டாய். ...!

தமிழ்நிலா 26-Dec-2005


காற்றுவெளி januvary 2011

நட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம்  என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அதை என்றும் அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது.
குழந்தை தொழிலாளியின் பொங்கல் புலம்பல்..


புது வருட 
புத்தரிசி பொங்கல்
புது பானையிலே..

அரிசி தந்த எம்
உழவர் பழம் 
பானையிலே..

பட்டாசு வெடிகளுடன்
பலகாரம் கம கமக்க,
சத்தம் இன்றி பிறக்கிறது
எம் ஏழைகள் புத்தாண்டு..

சோத்தில் கை வைக்க
சேத்தில் கால் வைத்தும்,
வயித்தில் அடித்திடும்
விலைவாசி ஏற்றத்தால் 
குழந்தை தொழிலாளரும் 
தவிக்கிறோம்  பொங்கலுக்கும்
விடுமுறை கிடைக்காமல்..

விவசாய நாட்டிலே 
அரிசி இறக்குமதியாம் 
மழையும் கைவிடவே 
கண்ணீர் பெருக்கேடுப்பாம்..

வெளிநாட்டு மண்ணுக்கு
தேயிலை ஏற்றுமதியாம்,
மலையாக மக்களுக்கு
வெறும் கண்துடைப்பாம்..

சூரிய பொங்கல் இங்கே
பொங்கி வழிகிறது...

வீட்டில் கவலை பொங்க
கண்ணீர் மட்டும் வழிகிறது...

தமிழ் நிலா 
தளம் உருவாக்கத்தில் உள்ளது, சிறிது நாட்களின் பின் எதிர் பாருங்கள், கடந்து வந்த காலங்களில் பதிவான பதிவுகளுடன், எனது எழுத்து பயணத்தையும் தொடங்குகிறேன். நாம் மறந்துவிட்ட பழைய எம் பண்பாடுகள், வழக்கங்கள். தொடர்பிலான கருத்துகள், தகவல்களும் பதிவேறும்.



அனைவருக்கும் புது வருட வாழ்த்துங்கள்... 

2011
தளம் உருவாக்கத்தில் உள்ளது, சிறிது நாட்களின் பின் எதிர் பாருங்கள், கடந்து வந்த காலங்களில் பதிவான பதிவுகளுடன், எனது எழுத்து பயணத்தையும் தொடங்குகிறேன். நாம் மறந்துவிட்ட பழைய எம் பண்பாடுகள், வழக்கங்கள். தொடர்பிலான கருத்துகள், தகவல்களும் பதிவேறும்.
புத்தாண்டில் ஒரு சிறுமியின்..கனவாக...


புதுமைகள் புரிய 
வந்த புத்தாண்டே..
உன் புதுமைகள் என்ன 
சொல்லாண்டே..

இரவினில் பிறக்கிறாய்..
உன் பிறந்தநாள்...1.1.11 
அட இது கூட புதுமை எல்லோ
உன் பிறப்பே புதுமை ஆச்சே

இங்கே சமாதானத்தை
தந்திடு.. நீ
புதுமையை ஒன்றொன்றாய் 
காட்டிடு..
அன்பை எங்கும் 
பரப்பிடு,
ஆணவ அலைகளை
அடக்கிடு,
துன்ப மலைகளை
உடைத்திடு,
கருணை மழையினை
பொழிந்திடு..

உயர்ந்தவர் புகழினை
இறக்கதே..
ஏழைகள் வயிற்றில் 
அடிக்காதே..
நண்பரை நீ
பிரிக்காதே..
நன்றியை என்றும் 
மறவாதே..
ஆயுள் ரேகையை
அழிக்காதே...
விலைகளை தினமும்
கூட்டாதே..

எங்கும் எதிலும் காதல் 
கொண்டு....உன்
புதுமைகள் அனைத்தையும்
புரிந்துடு......

தமிழ் நிலா 
எத்தனை வருடங்கள் கடந்தாலும் போர் கால வடுக்கள் போகாது. மீண்டும் வளருமா எம் பொருளாதார வளம். போர்காலத்தில் அங்கே சிக்கிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் அன்று எழுதியது. 


பனை மரத்தோப்பே...
பழகிய தெருவே சுகமா....
பச்சை சொர்க்கமே,
பனி விழும் பூவே நலமா...
மீண்டுவந்தேன் மீளவும்
நான் அம்மா....கையிழந்த 
தனி மரமா....!!!

நேற்றிருந்தோம் வீட்டினிலே...
சேர்ந்திருந்தோம் முற்றத்திலே...
விழித்திருந்தோம் இரவினிலே...
விடியும் முன்னே தனித்துவிட்டோம்
இரு உயிரை பிரிந்துவிட்டோம்....!!

இடம்தேடி நாம் நடந்து 
கால் தளர்ந்து போகையிலே...
கோயில் மடம் இருக்கு 
இளைப்பாற போய் இருக்க,
விழுந்தகுண்டிநிலே நாலுயிரை
அம்மனுக்கு பலி கொடுத்தோம்...!!

விடியம் இரவென்று காத்திருக்க
காட்டு நரிக்கூட்டம் கட்டவிழ்து
வருதென்று.. கால் போகும் இடம்
எங்கும் கையாலே தான் போனோம்...!!

பூச்சிக்கும் புல்லுக்குமம் மருந்தடிக்க
அஞ்சியோடும் எம் குழந்தைகளுக்கு
நச்சு புகையடிச்சு கருக்கிப்போன கயவரை
கண்டும் காப்பாற்ற முடியாம தவித்தோம்..

பாதுகாப்பு வலயம் என்று முள்ளுக்கம்பி
கட்டிவைச்சு நாளும் உயிர் கொன்று
சதை தின்னும் புத்தம் தெரிந்த ஆசாமிகளை
இன்னும் ஏன் விட்டு வைத்தோம்.....???

தமிழ்நிலா

காற்றுவெளி December 2010
Next PostNewer Posts Previous PostOlder Posts Home