Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு
பாதை பூட்டப்பட்ட பின்பு பொருட்கள் பதுக்கப்பட்டன... மக்களோ நிவாரணம் என்ற பெயரால் அலைக்களிக்கப்பட்டார்கள்.... அதிகாரிகள் அகதிகளை கூட ஏமாற்றினார்கள்..




சங்கத்தின் முன்னே ஒரு அம்மா
அம்மாவின் கையில் குழந்தை
குழந்தையின் கையில் ஒரு
குடும்ப அட்டை.....!!

பார்த்தேன் உள்ளே எட்டி
மனேஐர் கையில் அங்கர் பெட்டி
போட்டார் பில்லை தட்டி
வைத்தார் பெட்டியை கரியலில் கட்டி...!!

அம்மா கேட்டார் அங்கர் பெட்டி
மனேஐர் சொன்னார் இல்லை பெட்டி
அம்மா கேட்டா பிள்ளைக்கு பெட்டி
மனேஐர் சொன்னார் மனிசிக்கு பெட்டி

அம்மா கண்ணில் கண்ணீர்
இரவோ பிள்ளைக்கு தண்ணீர்
இங்கு வாழ்க்கையோ வெந்நீர்
எவனுக்கோ பன்னீர்.....!!!

தமிழ் நிலா 
என்னை மிகவும் பாதித்தது அந்த கார்த்திகை 10ம் திகதி 2006ம் ஆண்டு. அது ஒரு கெடியநிகழ்வு உரிமைக்காய் குரல் கொடுத்த என் உறவொன்றின் படுகொலை.




சன்னதிக்குப் போனேன்
மடத்தில் உணவு தந்தார்கள்
என்ன என்றேன்
அன்னதானம் என்றார்கள்...........!!

வைத்தியசாலைக்கு போனேன்
விடுதியில் இரத்தத்தை எடுத்தார்கள்
என்ன என்றேன்
இரத்ததானம் என்றார்கள்.......!!

ஜெனிவா போனேன்
அறையில் ஒப்பந்தம் எழுதினார்கள்
என்ன என்றேன்
சமாதானம் என்றார்கள்.....!!

யாழ்ப்பாணம் போனேன்
ஊரில் சுட்டார்கள்
என்ன என்றேன்
உயிர்த்தானம் என்றார்கள்.....!!

தமிழ் நிலா 
2004க்கு பிற்பட்ட காலங்களில் பரவலாக இடம்பெற்ற கொலைகள், படுகொலைகள், கடத்தல்கள் போன்றன என் மனதை பாதித்தபோது.....

தன் நாட்டு மக்களை 
கொன்றான் என்று 
சதாமுக்கு தூக்காம் 
அந்த வல்லரசின் 
தீர்ப்பாம் இது..............!!  

தன் நாட்டை விட்டு 
வேறு நாட்டு மக்களையே 
கொன்ற புஸ்க்கு 
இனி தீர்ப்பு வழங்காதா ஐ.நா.......???  
நம் நாட்டிலோ.....?? 
ஐயொ வேண்டாம் அந்த வீண் வம்பு.... 
வந்து விடும் எனக்கும் தீர்ப்பு......!!!  
இனியும் உளறினால் 
ஏனக்கும் தூக்கு தான்.... 

இதனால் என் பேனனாக்கு 
தூக்கென தீர்ப்பளிக்கிறேன்.....!!
தமிழ் நிலா 
Next PostNewer Posts Home