Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

நீ வெறும் கனவுக்கு பிறக்கவில்லை..
நிஜத்துக்கும் வாழ்க்கைப்படவில்லை...
அதனால் கனவுகளை விட
நிஜத்தையே அதிகம் நேசி...
இருப்பினும் கனவு காண்பதை
நிறுத்திவிடாதே...
கனவுகள் தானே நிஜமாகின்றன...

உன் முடிவுகளை நீயே எடுக்கப் பழகிக்கொள்..
ஆனால் முடிவெடுப்பது கடினம்..
காரணம் முடிவுகள் நிரந்தரமானவை அல்ல...
உன் கனவுகளுடன்,
பெற்றோரின் சராசரி கனவுகள்
போட்டி போடுகின்றன..
முடிவில் எது ஜெயிக்கும் என்பது
யாருக்கும் தெரியாது...
சில நேரங்களில் இரண்டும் தோற்பதும் உண்டு...

வாழ்க்கை என்பது கண்ணாடி போல,
இலகுவில் உடைந்து விடலாம்...
சில நேரங்களில் மீண்டும் ஒட்டவைப்பது
முடியாமலும் போகலாம்...
எமது செய்கைகள் மீள
எமக்கே திரும்புவதும் உண்டு...
ஒருவனை அழவைத்தால்,
அவனை விட நாமே அதிகம் அழுகின்றோம்...

உறவுகள் தவிர்க்கப்பட முடியாதவை...
ஆண் பெண் உறவு என்பது
காதல் மட்டும் என்பது இல்லை...
உறவின் எல்லை நட்பையும் அடையலாம்..
காதல் நட்பில் தான் முடிதல் ஆகாது...
இரண்டையும் அலட்டிக்கொள்ளாதே..

மடமைகளும் பாகுபாடும் தான்
மிஞ்சிய சொத்துகள்...
ஜாதிகளும், மதங்களும் தான்
எமக்கு விட்டு சென்ற சீர்வரிசைகள்...
சமூகமே ஒன்றிணைந்திருக்கையில்
நீ மட்டும் என்ன செய்வாய்...
தட்டிக்கேட்டால் நீ தான் குற்றவாளி..
மௌனமாக இருந்தாலும் கூட....

உன்னை நினைத்து சிரிக்கின்றேன்...
உனக்காய் மட்டும்  அழுகின்றேன்..
இறப்பதற்காக மனிதன் பிறப்பதும் இல்லை,
பிறந்த மனிதன் இறக்காமலும் இல்லை...
உன்னை சுற்றி குழிகள்
போட்டி பொறமை துரோகம்...
நீயாக வீழா விட்டாலும்
விழுத்துவதற்காய் பல கைகள்...
மீள துக்குவதற்கு கையே இல்லை...
நம் கையே நமக்கு உதவி...

தடை தாண்டி  போகையில்
தடைகள் சிலவேளைகளில் தட்டுப்படலாம்..
ஆனாலும் தொடர்ந்து ஓடு..
தோற்றுவிடமாட்டாய்...

தமிழ்நிலா

முதல் முதலாக கப்பல் கட்டுமானத்தில் டைடானிக் மூழ்காத (Unsinkable) ஒரு கப்பலாக மிகவும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது. டைடானிக் கப்பல் விபத்து முதலும் கடைசியுமாக மூழ்கிய கடல் பயணத்தின் சோகமான பதிவாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.


உலகத்து கவிஞர்களே
உங்கள் பேனாவை
ஒருமுறை மூடிக்கொள்ளுங்கள்...

கலாச்சாரம் அழிகிறது,
தமிழனை காணவில்லை....

அங்கம் தெரிகிறது,
ஆடைகளை காணவில்லை...

காமம் கனக்கிறது,
காதலை காணவில்லை...

ஆசை அழைக்கிறது,
அன்பை காணவில்லை...

பாசம் நடிக்கிறது,
பண்பை காணவில்லை...

படித்தும் அங்கே
பணிவை காணவில்லை...

விஞ்ஞானம் வளர்கிறது,
மனிதாபிமானத்தை காணவில்லை...

உலகத்து கவிஞர்களே
உங்கள் பேனாவை
திறந்து கொள்ளுங்கள்...
காதலை பாடும் கைகளால்
காவியம் எப்போது தரப்போகிறீர்..???


தமிழ்நிலா

நேற்று ஒரு கனவு
மீண்டும் அதே யுத்தகளம்...

பகவத்கீதைகள்,
குர் ஆன்கள்,
பைபிள்கள்
பௌத்த ஆகமங்கள்
தான் உயிர் கொல்லும்
ஆயுதங்கள்...

போராடும் களங்களில்
ஜாதிகள், மதங்கள்
தான் வீரர்கள்...

பால்வீதியில்
நிலவினைப்போலே...
வான வீதியில்
பறவைகள் போல

நான் மட்டும் சுதந்திரமாக...
உலகத்தை விலக்கி வைத்துவிட்டு.....

தமிழ்நிலா


னக்கு சுதந்திரம்
வேண்டும்...

பிறக்கும் வரை
அடைபட்டு வாழ்ந்தோம்..
அது சுகம்..
வளர்கையிலும் அப்படிதான்..
வளர்ந்தபின்னும் அப்படிதான்...
இது சுமை

எல்லாம் முடிந்தது
சுதந்திரம் என்றார்கள்...
அடாவடிகளில்
ஆண்களுக்கு சுதந்திரம்...
ஆடைகளில்
பெண்களுக்கு சுதந்திரம்...
இது தான் கிடைத்தது...

பேனா முனை நோக்கிய
துப்பாக்கி முனைகள்...
சீருடைகளில் ரத்த கறைகள்..
நீண்ட பயணங்களில்
நிலகீழ் கண்ணிகள்...
எங்கே சுதந்திரம்..

வெள்ளைக்காரர்களிடம் இருந்து
கிடைத்தாகிவிட்டது..
கொள்ளைகாரர்களிடம் இருந்து..
எப்போ கிடைக்கும்..???

சுதந்திரம் கேட்டவர்கள்
தியாகிகள் ஆனார்கள்..
கம்பிக்கு பின்னால் பலர்
காணாமல் போனார்கள்...

கூட்டில் இருக்கும்
கோழிகளுக்கு சுதந்திரம்..
மந்தை ஆடுகளுக்கும் சுதந்திரம்...
காட்டு சிங்கங்கள்
வீட்டுக்குள் வந்ததால்
நாட்டில் இல்லை
என்றுமே சுதந்திரம்..

எனக்கு சுதந்திரம்
வேண்டும்...
எப்போ கிடைக்கும்..
இல்லை இல்லை..
எங்கே கிடைக்கும்..??

காற்றுவெளி March 2012 

தமிழ்நிலா


செய்வினையாய்
விலைவாசி...

திணறும் வாழ்க்கை
அத்தியாவசியப் பொருட்களில்
விலை உயர்வு...

ஏழைகள் வீட்டில் 
நிலாவுக்கு தான் இனி வேலை...
மண்ணெண்னைய் விலை ஏற்றமாம்..

மீண்டும் சூரியனுக்கு ஆபத்து..
சக்தியை உறிஞ்சபோகிரார்கள்...
மின்சாரம் விலை ஏற்றமாம்.....

விபத்துகளும் குறையவில்லை
பெற்றோல் விலை ஏற்றமாம்...

உரசல்களும் குறையவில்லை...
பேருந்து கட்டண ஏற்றமாம் 

தாசிகளும் குறையவில்லை...
மாப்பிளை விலையேற்றம்...

நாட்டில் விலை  ஏற்றம்...
தற்கொலைகளும் மீள் ஏற்றம்..
காசும் விலை  ஏற்றம்...
கண்ணீரில் உப்பும்  ஏற்றம்..
பாணும் விலை ஏற்றம்...
பட்டினி சாவுகளும் இனி ஏற்றம்...

தமிழ்நிலா

நண்பர்களுக்கு வணக்கம், மீண்டும் ஒருமுறை உங்களை இந்த 2 ஆவது குறும்கவிதைகள் ஊடாக சந்திக்கிறேன். நீங்கள் கொடுத்து வரும் சிறிய ஆதரவுக்கு பெரிய கடமைப்பட்டிருக்கிறேன்.
Next PostNewer Posts Previous PostOlder Posts Home