Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

விலைபோன உயிரே.....

Leave a Comment
நேரடியாக பார்த்தவற்றில் எனக்கு பாதித்தவைகளில் ஒன்று.



யிருக்கும் விலை உண்டு,
கொலை உண்டபோது தான்
புரிந்து கொண்டேன் இதை
இந்த பூமியிலே....

இன மத ஜாதி பாராத
எத்தனையோ நட்பினிலே..
அகோரம் நிறைந்த அந்த நட்பையும்
பார்த்துவிட்டேன்
இந்த பாரினிலே....!!!

போர்க்களத்திலே நீதி சொன்ன
கண்ணன் எங்கே....
நட்பென்று பேசி
மந்தைக்குள் புகுந்து விட்ட
குள்ளநரிகளை பார்த்த பின்னுமா....
ஜேசு தோன்றவில்லை....???

மனம் பார்த்து வருமாம் நட்பு..
ஜயோ பணம் பார்த்து வரும்
நட்பை கூட கண்டுவிட்டேன்..
பாவம் செய்த கண்களாலே.....
அல்லாவே உன் கண்கள் எங்கே.....???

நிலை அற்றது பணம்...
குறை அற்றது அன்பு....
கொடிய மிருகமே...
அவன் கண்ணை பார்க்கும் போது
அது தெரியவில்லையா ...???

புத்தனே நீ பெற்ற ஞானம் எங்கே....??
ஒரு துளியாவது
கொடுத்திருக்கலாமே....

நட்பென்று பழகி....
அவன் மூச்சில் வாழ்ந்து.....
அவன் மூச்சையே மூட வைத்த
அந்த நண்பர்கள்......

பணத்துக்காக உயிரை விலைபேசி
நட்பை கொன்று புதைத்த
அந்த இளைஞர்கள்....
இப்போது சட்டத்தின் பிடியில் இருந்தாலும்.....
எதிர்காலத்தில் தப்பித்து போனாலும்....

..
தங்கள் மகனின் வருகைக்காய்
ஏங்கும் பெற்றோருக்கும்...
சகோதரனின் வருகைக்காய்
ஏங்கும் உடன்பிறப்புக்களுக்கும்...

அவனின் அன்பிற்காக ஏங்கும்
உறவுகளுக்கும்.....
உண்மையான நண்பர்களுக்கும்....

அவர்கள் கொடுக்க போவது என்ன.....????
நண்பனின் உயிரா....?
இல்லை தங்களது உயிரையா....?

27.03.2010
யாரோ ஒருவன்

Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா