வந்து தன் கோரத்தை காட்டிப்போன கொடிய அந்த நிசாவின் கோரம் மறையாது என்றும்..... பெருங்குளம், கச்சாய் மீசாலை வீதிகளில் பயணிக்கும் பொது கண்ட அனுபவங்கள். November -2008

காலமழை காலம் தாழ்த்தி
போட்டிருந்த வீதித்தடை
அகற்றியது போல்
கட்டவிழ்த்து வந்தான்....!!
கட்டிலில் கிடந்தோர் எல்லாம்
கடல் நீரில் மிதக்க அவன்
தன் இடக்காலை வாசல்வழி
மெல்ல வைத்தான்....!!
கால் வைத்த அவனுக்கோ
ஆலத்தி எடுக்க ஆள் தேடி
அறைக்குள்ளும் போய் விட்டான்
உறவாடி களைத்து தான்
அவன் சமையல் பக்கம்
உயர்ந்து போனான்...
பானைகள் நீந்தி முத்தம் வர...
பனைகளும் வீட்டை முத்தமிட்டன
பதநீர் குடித்த அவனுக்கு
மயக்கம் வரத்தான் போகும்
இடம் எங்கும் மரங்களையும்
அழைத்தான் துணையாக...!!
இராணுவம் ஆக்கிரமிக்காத
இடங்களையும் இவன் ஆக்கிரமித்து
வீடுகளை கைப்பற்றி முகாம்களுக்கும்
படை எடுத்தான்...
துன்பத்தால் துன்பப்பட்டவனை
துன்பத்தில் முழ்கடிக்க அவன்
வயலையும் சமுத்திரமாக்கி
அலையினை அடித்து
குழந்தையை பிடித்தான்
தன் கோரப்பிடியில்...!!
மேசையின் மேலே நாய்களை விடும்
மனிதரும்... பசு மாடுகளை
தண்ணிரில் தவிக்கவிடும்
மடயரும்.... எங்கு தான் உள்ளார்கள்...
வேறெங்கும் இல்லை...
ஆடுகள் முக்குளிக்க பூனைகள்
இறந்துவிடும்... ஜயோ பாவம்
கோழிகள் தான் என்ன செய்யும்...
தமிழ் நிலா
இறந்துவிடும்... ஜயோ பாவம்
கோழிகள் தான் என்ன செய்யும்...
தமிழ் நிலா
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா