வஞ்சம் தீர்க்கப்பட்ட வன்னி மக்களின் இன்றய நிலை... மீள திரும்பாத மாணவர் மனநிலைகள்... எதிர்காலம் எரிக்கப்பட்ட இளஞர் யுவதிகள்...

பறப்பதற்கு சிறகிருந்தும்
நுடக்க முடியா எம் உறவுகள்
சத்தம் ஒன்று கேட்டாலே
பறந்து போகும் குருவிகள்... இது
ஏனோ தெரியவில்லை...!!
தினம் எண்ணி எண்ணி
செத்துப்போகும் இளசுகள்..
பெரும் காடாய் போன
தமிழ் பள்ளிகள்....
பள்ளி செல்ல முடியா
சிறிசுகள்... இது தான் எம்
சாபமோ தெரியவில்லை...!!
புத்தகம் இல்லா பைகளும்
மையே இல்லா பேனைகளும்
இரத்தம் படிந்த சீருடைகளும்
இது தான் இனி வாழ்கையோ
ஏனக்கு தெரியவில்லை...!!
கதிரைகள் இல்லா மேசைகளும்
மேசைகள் இல்லா கதிரைகளும்
தரையே கதிரையாய் மாறும்
சில நேரங்களும்... இது விதியா
அல்ல சதியா ஒன்றும் தெரியவில்லை..!!
கொட்டில்கள் இனி வகுப்பாய் போக
கைகள் இனி கால்களாய் போக
சோதனையில் வாடும் எம்மை
சோதனைகளும் விடவில்லை...
காரணமும் தெரியவில்லை...!!
பேய்க்காட்டும் பொய் கோலம்
நிவாரணமும்... எம்
பிள்ளைகள் பசியால்
சதா ரணமும்.. இது எல்லாம்
எவனுக்கோ சாதாரணமாய்
போனது ஏனோ தெரியவில்லை....!!
தமிழ்நிலா
காற்றுவெளி November 2010
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா