குழந்தை தொழிலாளியின் பொங்கல் புலம்பல்..

புது வருட
புத்தரிசி பொங்கல்
புது பானையிலே..
அரிசி தந்த எம்
உழவர் பழம்
பானையிலே..
பட்டாசு வெடிகளுடன்
பலகாரம் கம கமக்க,
சத்தம் இன்றி பிறக்கிறது
எம் ஏழைகள் புத்தாண்டு..
சோத்தில் கை வைக்க
சேத்தில் கால் வைத்தும்,
வயித்தில் அடித்திடும்
விலைவாசி ஏற்றத்தால்
குழந்தை தொழிலாளரும்
தவிக்கிறோம் பொங்கலுக்கும்
விடுமுறை கிடைக்காமல்..
விவசாய நாட்டிலே
அரிசி இறக்குமதியாம்
மழையும் கைவிடவே
கண்ணீர் பெருக்கேடுப்பாம்..
வெளிநாட்டு மண்ணுக்கு
தேயிலை ஏற்றுமதியாம்,
மலையாக மக்களுக்கு
வெறும் கண்துடைப்பாம்..
சூரிய பொங்கல் இங்கே
பொங்கி வழிகிறது...
வீட்டில் கவலை பொங்க
கண்ணீர் மட்டும் வழிகிறது...
தமிழ் நிலா
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா