Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

கவிஞர் பெரிய ஐங்கரன்

2 comments

வர் பற்றிய தகவல்களை நீண்ட நாட்களாக தேடி ஒருவாறு இன்றுதான் கண்டு பிடித்தேன். 2006 இல் நாங்கள் சாதாரணதரம் கற்கும் போது எமது தனியார் கல்வி நிறுவனத்தில் (பிறைற்றின்)  எமக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர். மிகுந்த ஆளுமை உள்ளவர்,
ஒரு நாள் ஒரு புத்தகம் கொண்டுவந்திருந்தார். அந்த புத்தகத்தின் பெயர் "எனக்கு மரணம் இல்லை" அதில் எழுதியவர் பெரிய ஐங்கரன் என்று இருந்தது.

அன்று தான் அவர் ஒரு கவிஞர் என்பதை அறிந்துகொண்டேன். பெரிய ஐங்கரன் அவர்கள் பிறந்தது 1981, பிறந்த இடம் புலோலி, புலோலிக்கும் எனக்கும் சிறு தொடர்பு உண்டு எனது பாட்டனாரின் பிறந்த இடமும் புலோலி. பெரிய ஐங்கரன் எனக்கு பிடித்த மனிதர்களில் ஒருவர். எனது கவிதைகளை முதன் முதலில் பாராட்டிய கவிஞரும் இவர் தான்.

பெரிய ஐங்கரனின் படைப்பாற்றல் என்று நோக்கும் போது, அவர் ஒரு பல் ஆளுமை மிக்கவர். கவிதை, சிறுகதை, கட்டுரை, விமரசனம், நடாகம், நடிப்பு என்று நீண்டு கொண்டே போகும்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்பை மேற்கொண்டவர். தமிழ் ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவரது படைப்புக்கள் சங்கு  நாதம், சுடர் ஒளி, மெட்றோ நியூஸ், புதியதரிசனம், ஞானம் ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. 

திருவிளையாடல், பாஞ்சாலிசபதம், சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திரா, கோவலன் கண்ணகி (இசை நாடகம்), காத்தவராயன் (சிந்து நடைக் கூத்து) ஆகிய நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். நாடகத்துக்கு தேவையானது போல் தனது உடலமைப்பை மாற்றும் திறமை கொண்டவர். இவரது கவிதை தொகுப்புகள் அகில இலங்கை இளங்கோ கழகம் ஊடாக தான் வெளிவந்தன. 

கவிதைத் தொகுப்புகள்: 
  • எனக்கு மரணம் இல்லை – 2004 
  • ஞானக்கண் - 2007
  • வானவில் - கைக்கூ - 2007


இவர் பற்றிய மேலதிக தகவல் தெரிந்தவர்கள், thamilnila05@gmail.com என்னும் முகவரி ஊடாக தகவல்களை அனுப்பினால் உங்களது பெயருடன் பிரசுரிக்கப்படும் - நன்றி 


அன்புடன் -sTn-
Next PostNewer Post Previous PostOlder Post Home

2 comments:

  1. எனக்குத் தெரிந்தவரையில் கறுப்பு மழை எனும் கவிதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளார்

    ReplyDelete
  2. நன்றி உங்கள் தகவலுக்கு, மேலும் தகவல்கள் வரவேற்கப்படுகின்றன..
    அன்புடன் -sTn-

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா