Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

யார் இந்த மரீ கோல்வின் (Marie Colvin)..?

1 comment

ப்போது ஊடகங்கள் எல்லாவற்றிலும் அதிகமாக பேசும் செய்தியாகவும், செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் எல்லோரையும் கலங்க வைத்திருக்கும் செய்தி மரீ கோல்வின் இன் படுகொலை.

சிரியாவின் ஹோம்ஸ் நகரின் பாபாஅமர் பிரதேசத்தில் செயற்பட்டுவந்த தற்காலிக ஊடக மையத்தின் மீது ஷெல் தாக்குதல் நடந்தபோது, சண்டே டைம்ஸ் பத்திரிகையின் மரீ கோல்வின் மற்றும் பிரஞ்சு புகைப்பட நிபுணர் ரெமி ஒச்லிக் ஆகிய இந்த இரண்டு ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டார்கள்.

புதன் கிழமை காலை இந்த கட்டிடத்தின்மீது ஷெல் தாக்கியது. அதைத்தொடர்ந்து அந்த கட்டிடத்திலிருந்தவர்கள் வெளியே ஓடியபோது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் சடலங்களை காட்டும் காணொளி வெளியிடப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

சிரியாவின் ஹோம்ஸ் நகரில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் மரீ கோல்வினுக்கு உலகத் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த தருணத்தில் மரீ கோல்வின் பற்றி ஒரு பார்வை...

மரீ காத்தரீன் கோல்வின் (Marie Catherine Colvin). பிறந்தது ஜனவரி 12, 1956  ம் ஆண்டு  ஐக்கிய அமெரிக்காவில், நியூயார்க் மாநிலத்தில், லாங்கு ஐலண்டில், நாசோ வட்டத்தில் உள்ள ஓய்சிட்டர் பே என்னும் இடத்தில் பிறந்தார். கொல்லப்பட்டது சிரியாவின் ஹோம்ஸ் நகரில் பெப்ரவரி 22, 2012. இல். 

ஒய்சிட்டர் பே உயர்நிலைப்பள்ளியில் கல்வி கற்று 1974 இல் தேர்ந்த பிறகு, யேல் பல்கலைக்கழகத்தில் மாந்தவியல் துறையில் படித்து 1978 இல் இளநிலை பட்டம் பெற்றார்.  பட்டம் பெற்ற பின்பு ஓராண்டு கழித்து யுனைட்டடு பிரசு இண்டர்நேசனல் என்னும் நிறுவனத்தின் சார்பாக நியூ யார்க்கு நகரக் காவலர் செய்தியாளராகப் பணியாற்றினார். 1984 இல் யுனைட்டடு பிரசு இண்டர்நேசனலின் பாரிசு பியூரோவின் தலைவராக இல் பதவி ஏற்றார். இவர் பிரித்தானிய செய்தித்தாளாகிய த சண்டே டைம்ஸ் நிறுவனத்துக்காக 1985 முதல் பணியாற்றிய ஓர் அமெரிக்கப் பத்திரிகையாளர். 

1986 இல் இவரே இலிபியாவைச் சேர்ந்த மோமார் கடாஃவியை முதன்முதலாக நேர்காணல் கண்டார், அதுவும், அமெரிக்காவின் எல்டொராடோ கேன்யன் (எல்டொராடோ பள்ளத்தாக்கு) எனப் பெயர்சூட்டப்பட்ட படைத்துறை நடவடிக்கையில் இலிபியா மீது குண்டுபோடப்பட்ட பிறகு, கண்டார்.

இவர் பல ஆவணப்படங்களுக்கு வசனம் எழுதி உருவாக்கி இருக்கின்றார் -எடுத்துக்ககட்டாக பிபிசி-யுக்காக எடுத்த, அராபத்து-புனைவுருவுக்கு பின்னே (Arafat:Behind the Myth) இவர் 2005 ஆம் ஆண்டு சாட்சியாக நிற்றல் (Bearing Witness) என்னும் ஆவணப்படத்தில் காட்சியாகியுள்ளார். 

இவர் இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்த பொழுது செய்தியாளராகப் பணியாற்றியிருந்தார். இலங்கை படையினரின் தாக்குதலில், 2001, ஏப்பிரல் 16 அன்று "RPG" வெடிப்பில் சிதறிய துண்டு ஒன்று கண்ணில் பட்டு காயம் ஏற்பட்டதில் இருந்து ஒரு கறுப்புக் கண்மூடி அணிகிறார். நடந்த போரில் கடைசி நாட்களில் நிகழ்ந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்களை கோல்வின் நேரில் பார்த்தவர்களில் ஒருவராவார். இருதரப்புக்கு இடையே இயங்கிய தொடர்பாளராகவும் இருந்தார்.

2011 இல், லிபியாவில் நடந்த உள்நாட்டுப் போரைப் பற்றி அங்கிருந்து செய்தி அறிவித்த போது இவரையும், இவரோடு இருவரையும் கடாபி தன்னை நேர்காணல் செய்ய அழைத்திருந்தார். இவருடன் ஏபிசியைச் சேர்ந்த கிறித்தீன் அமான்ப்பூர், பிபிசியைச் சேர்ந்த செரமி போவன் ஆகியோரையும் அழைத்துச் சென்றார்.

இறப்பு

22 பெப்பிரவரி 2012 இல் கோல்வின், சட்டப்படி இல்லாமல் மோட்டோகிராசு ஈராழி உந்தில் சென்று சிரியா அடைந்ததர். அங்கே நடக்கும் நிகழ்வுகளைப் பதிவு செய்ய வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்குச் சிரிய அரசு அனுமதி அளிக்கவில்லை. 

கோல்வின், சிரியாவின் ஓம்சு நகரத்தின் மேற்கு பாபா அமர் (Baba Amr) என்னும் இடத்தில் இருந்தார். அங்கிருந்தே அவர் செயற்கைத் துணைக்கோள் தொலைபேசிவழி தன் கடைசி செய்தி அலைபரப்பையும் பெப்பிரவரி 21 அன்று பிபிசி, சானல்4, சிஎன்என், ஐடிஎன் நியூசு ஆகியவற்றுக்குத் தந்தார்.

விருதுகள் 

  • 2000: சிறந்த ஊடகவியலாளர்: Foreign Press Association.
  • 2000: Courage in Journalism: International Women's Media Foundation.
  • 2001: British International Journalist of the Year award|Foreign Reporter of the Year:[[British Press Awards
  • 2010: British International Journalist of the Year award:British Press Awards (second award).

அன்புடன் -sTn-
Next PostNewer Post Previous PostOlder Post Home

1 comment:

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா