.jpg)
புன்னகை..
கனவு தேசத்து
பளிங்கு மாளிகையின்
கண்ணாடி மேசை...
ஏழைகளின்
ஒரு வரி முகவரி
வாய் பேசாதவர்களின்
ஒற்றை வார்த்தை..
உதட்டில் பூக்கும்
வெள்ளை மலர்...
இதழ்கள் வாசிக்கும்
இன்னிசை...
புன்னகை என்பது
கதை அல்ல கவிதை..
புன்னகை என்பது
ஒலி அல்ல ஓவியம்..
இப்போதெல்லாம்
கவிதைகளில் கெட்டவார்த்தைகள்..
ஓவியத்தில் தப்பான அடையாளங்கள்...
பொய்க்கு முன்னால்
பொய்யான புன்னகை...
கேலி பேசுகையில்
கபட புன்னகை...
காட்டிகொடுக்கையில்
மாய புன்னகை...
மற்றவரின் தோல்வியில்
சந்தோஷ புன்னகை...
கவர்ச்சி காட்டுகையில்
மந்திரப்புன்னகை...
புன்னகைப்பூக்கள்
எப்படி கருகி பூக்கின்றன...??
புன்னகை என்பவள் அகதி...
நேற்று இங்கு
நாளை அங்கு...
புன்னகை என்பவள் விபச்சாரி..
நேற்று என்னோடு
நாளை அவனோடு...
புன்னகை இப்போது...
நந்தவனமாய் இல்லை
பாலைவனமாய்...
சமாதானம் பேசவில்லை..
சண்டை போடுகிறது...
தேவாலயத்தில் வருவதில்லை..
மயானத்தில் வருகிறது...
காதலை செய்யவில்லை
கடமையை செய்கிறது,,
உதடுகளையே காட்டுகிறது..
உள்ளத்தை கட்டுவதில்லை...
இப்போதெல்லாம் எம்மால்
புன்னகைக்க முடிவதே இல்லை...
கடல் போல் சத்தமாக...
இல்லை
தென்றல் போல் அமைதியாக...
ம்ம்
இரண்டுமே முடிவதில்லை...
புன்னகை என்பது..
காணாமல் போய்விட்டது...
உதடுகளில் இருந்து....
தமிழ்நிலா
எத்தனை எத்தனை புன்னகைகள்...
ReplyDeleteஉதடுகளையே காட்டுகிறது
உள்ளத்தை காட்டுவதில்லை... ௦- உண்மை வரிகள்...
எத்தனை எத்தனை புன்னகைகள்...
ReplyDeleteஉதடுகளையே காட்டுகிறது
உள்ளத்தை காட்டுவதில்லை... ௦- உண்மை வரிகள்...
nice kavithai
ReplyDeleteநன்றி தனபாலன் ஐயா
ReplyDeleteநன்றி அக்கா
ReplyDeletenice lines
ReplyDeleteநன்றி......
ReplyDelete