Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

என் ஸ்பாட்டா...

4 comments


ஸ்பாட்டா எனும்
வீரத்தின் பேரரசு
மீண்டும் உருவாகியிருந்தது...
ஸ்பாட்டகஸ்
என் ஸ்பாட்டாவின்
மன்னராகி விட்டான்..

சிக்குண்டு சிதறியிருக்கும்
சுருண்ட கூந்தல்
முடித்திருப்பான்...
கண்களுக்குள் 
சாம்பல் கொட்டி 
விழித்திருப்பான்...
நாக்கில் தேன் பூசி
உதடுகளில் விஷம் 
தடவியிருப்பான்...
வழமையான
கற்பனையில் இருந்து
முற்றிலும் மாறி இருந்தான்...

புயங்களில் வீரம்
புலன்களில் ஏக்கம்..
கொண்ட ஸ்பாட்டகஸ்
என் ஸ்பாட்டாவின்
மன்னராகி விட்டான்..

இந்த ஸ்பாட்டா 
மனித இனத்தொன்மங்களின் 
தொடக்கம் அல்ல 
அடிமைத்தனத்தின் முடிவிடம்...

தமிழ்நிலா

ஸ்பாட்டகஸ் என்பவர் உரோமைக் குடியரசுக்கு எதிரான ஓர் பாரிய அடிமைகளின் எழுச்சியின் போரில் உரோமினால் அடிமைகளாக்கப் பட்டவர்களின் தலைவராக இருந்தவர். ஸ்பாட்டகஸின் போராட்டம் என்பது அது அடிமை ஆட்சிக்கெதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு எடுத்துக்காட்டாக இருந்து வருகின்றது.

Next PostNewer Post Previous PostOlder Post Home

4 comments:

  1. ஸ்பாட்டகஸ் பற்றிய மேலதிக தகவல்களை அறியத் தூண்டுகிறது பதிவு
    பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  2. ஸ்பாட்டகஸ் பற்றிய மேலதிக தகவல்களை அறியத் தூண்டுகிறது பதிவு
    பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  3. அறியாத தகவல்... நன்றி...

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா