Sanjay Nanthakumar's

நாட்குறிப்பு

காதல் எப்படி வேண்டுமானாலும்...!!

4 comments


காதல்
எப்போதும்,
எப்படி வேண்டுமானாலும்...
யார்மேலும்,
எதன் மேலும்....
எப்படியோ வந்துவிடுகிறது..

வலிகளை  பொறுக்கும் தாய்க்கு
வெளிவரும் குழந்தை மேல் காதல்...
பால் மணம் மாறா குழந்தையின்
கன்னக்குழி மேல் எனக்குக் காதல்...



இலை உதிர்க்கும் செடிக்கு
வரும் துளிர் மேல் காதல்...
துளிர்கண்டு மரமிளக்கும்
இலை மேல் எனக்குக் காதல்...

பள்ளி செல்லும் சிறுமிக்கு
வெள்ளைத்துணி மேல் காதல்.,
வெள்ளைத்துணியில் வரும்
கறை மேல் எனக்குக் காதல்...

மணம் வீசும் மலருக்கு
தேன் வண்டின் மேல் காதல்...
வண்டின் வலி பொறுக்கும்
மலர் மேல் எனக்குக் காதல்...

விளையாடும் சிறுவனுக்கு
வெற்றி மேல் காதல்..
எதிரணி சிறுவனின்
தோல்வி  மேல் எனக்குக் காதல்...

மிதிபடும் வண்டிக்கு
சில்லின் மேல் காதல்...
சுழலும் சில்லின் ஆழ
தடங்கள் மேல் எனக்குக் காதல்...

எல்லோருக்கும் ஜன்னலோர
இருக்கை மேல் காதல்...
இருக்கை உதிர்க்கும்
புன்னகை மேல் எனக்குக் காதல்...

தேயும் மனிதனுக்கு
சேர்க்கும் பணம் மேல் காதல்..
பணத்தில் சிந்தும்
வியர்வை மேல் எனக்குக் காதல்...

அடிக்கும் அலைக்கு
கரை மேல் காதல்...
கரையில் ஒதுங்கும்
நுரைமேல் எனக்குக் காதல்...

கூன் விழுந்த கிழவிக்கு
கைத்தடி மேல் காதல்..
தடி பிடிக்கும் கையின்
சுருக்கம் மேல் எனக்குக் காதல்...

எல்லை கடக்கும் பறவைக்கு
அடிக்கும் சிறகின் மேல் காதல்..
கூட்டில் இருக்கும் குருவிக்கு
ஊட்டும் தாய்மேல் எனக்குக் காதல்...

பிணவீட்டில் அழுவோர்க்கு
பறை மேல் காதல்...
நெருப்பிலும் அணையா
உண்மை நீர் மேல் எனக்குக் காதல்...

மலையில் மேகம் சிந்தும்
மழை மேல் மரத்திற்கு காதல்..
விசிறும் தூவானத்தில்
சரியும் செடிமேல் எனக்குக் காதல்...

இன்னும் காதல் அவ்வளவு
எத்தன் மேலும் எனக்கு ...
காணமல் போகும் காதல் மேல்
எப்போதும் எனக்கு.....

தமிழ்நிலா
Next PostNewer Post Previous PostOlder Post Home

4 comments:

  1. வணக்கம்

    அருமையான காதல் கவிதை... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்
    த.ம. 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. காதலை ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete

உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா