என் தேசம் களவாடப்பட்டது..
ஒன்றாய், ஒவ்வொன்றாய்,
எல்லாமுமாய்..
நிஜம், நிழல்களின் பின்னே
ஒளிந்து கொண்டது..
இருள், ஒளியினை முழுதாய்
கவ்விக்கொண்டது..
என் புன்னகை தேசம்
கண்ணெதிரே களவாடப்பட்டது..
மழைச்சாலையில் சிந்திய
வண்ணங்களின் எச்சங்கள்...
மலர்ச்சாலையில் சிதறிய
பூக்களின் எச்சங்கள் மீதமிருக்க
பல முகங்கள் கொண்டு
சிலமுகங்களை களைந்து
அன்பில் இருந்து அத்தனையும்...
களவாடப்பட்டது..
மீண்டும் மீண்டும் அவர்களாலும்
பின்னாளில் எங்களாலும்...
தமிழ்நிலா
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா