பாதை பூட்டப்பட்ட பின்பு பொருட்கள் பதுக்கப்பட்டன... மக்களோ நிவாரணம் என்ற பெயரால் அலைக்களிக்கப்பட்டார்கள்.... அதிகாரிகள் அகதிகளை கூட ஏமாற்றினார்கள்..

அம்மாவின் கையில் குழந்தை
குழந்தையின் கையில் ஒரு
குடும்ப அட்டை.....!!
பார்த்தேன் உள்ளே எட்டி
மனேஐர் கையில் அங்கர் பெட்டி
போட்டார் பில்லை தட்டி
வைத்தார் பெட்டியை கரியலில் கட்டி...!!
அம்மா கேட்டார் அங்கர் பெட்டி
மனேஐர் சொன்னார் இல்லை பெட்டி
அம்மா கேட்டா பிள்ளைக்கு பெட்டி
மனேஐர் சொன்னார் மனிசிக்கு பெட்டி
அம்மா கண்ணில் கண்ணீர்
இரவோ பிள்ளைக்கு தண்ணீர்
இங்கு வாழ்க்கையோ வெந்நீர்
எவனுக்கோ பன்னீர்.....!!!
தமிழ் நிலா
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா