என்னை மிகவும் பாதித்தது அந்த கார்த்திகை 10ம் திகதி 2006ம் ஆண்டு. அது ஒரு கெடியநிகழ்வு உரிமைக்காய் குரல் கொடுத்த என் உறவொன்றின் படுகொலை.
சன்னதிக்குப் போனேன்
மடத்தில் உணவு தந்தார்கள்
என்ன என்றேன்
அன்னதானம் என்றார்கள்...........!!
வைத்தியசாலைக்கு போனேன்
விடுதியில் இரத்தத்தை எடுத்தார்கள்
என்ன என்றேன்
இரத்ததானம் என்றார்கள்.......!!
ஜெனிவா போனேன்
அறையில் ஒப்பந்தம் எழுதினார்கள்
என்ன என்றேன்
சமாதானம் என்றார்கள்.....!!
யாழ்ப்பாணம் போனேன்
ஊரில் சுட்டார்கள்
என்ன என்றேன்
உயிர்த்தானம் என்றார்கள்.....!!
தமிழ் நிலா
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா