நவீன சந்தைக்கட்டிடம், பொது விளையாட்டு மைதானம், தகனசாலை என்பவற்றை கடந்து மெல்லமாக அடி அடுத்து வைத்தது.. எங்கும் பச்சையை காட்டும் வயல்வெளிகள், புல்வெளிக்களுமாய் நிறைந்திருந்தது.. திடீர் திருப்பமாய் 1 பலகை


இரண்டாக பிரியும் பாதையில் இராணுவ முகாம் வரவேற்பளித்ததது. கடந்து செல்லும் பாதையில் இயற்க்கை அழகு தெரிந்தாலும். போரின் வடுக்களுக்கு பஞ்சம் இருக்கவில்லை. உடைந்த வீடுகள், கட்டிடங்கள் எம் பனைவளங்களின்


இரு மருங்கிலும் அலங்கார வளையங்கள் கட்டப்பட்டது போல கண்ணிவெடி வலையங்கள் கண்ணில் பட்டன. அதற்கு பின்னாலும் அழகு ஒளிந்திருந்தது. நீர் நிரம்பிய பகுதிகள், புல் வெளிகள், கடல்கள், மண் மேடுகள், என அழைகை கூட்டியது.


எத்தனையோ மில்லியன் செலவால் உருவான பாலத்தை கடந்து பயணிப்பதர்ற்கு அதற்கு முன் வரும் பாதைகள் கைகொடுக்கவில்லை. வரும் பிரச்சனைகள் தெரியாத எமக்காக மழை முற்கூடியே கண்ணீர் சிந்த தொடங்கியது. மழையும் பெய்வதனால் இன்னும் அழகு கண்களை கடந்தன. கடலில் பயணம் செய்யும் அனுபவமும் இந்த வீதியில் பயணிக்கையில் கிடைத்தது.


வீதியின் இரு மருங்கிலும் கடல் அழகாய் கரைதொட்டது. கரை வீதியின் ஓரம் என்பதால் இன்னும் அழகு. மழை எமை துரத்தியதால் நின்று அதை இரசிக்க முடியவில்லை. சங்குப்பிட்டியில் மெதுவாக பயணம். பாலம் எமை வரவேற்றது.
வீதி அபிவிருத்தி அதிகார சபை வாகனங்கள், போலீசார், சில பார்வையாளர்கள் சூழ்ந்த இடத்தை அண்மித்தோம். மிகவும் நீண்டு, உயரமாகவும் இருந்தது. இருப்பினும் பயணிக்கையில் நீளம் தெரியவில்லை. பொலிசார் குளத்தில் காவல் இருக்கும் கொக்கு போல் காத்திருந்தனர்.




மூன்று மொழிகளிலும் காணப்பட்ட பெயர்ப்பலகை


அழகினை அனுபவிக்க போதிய நேரத்தை மழை எமக்கு தரவில்லை, பொலிசாருக்கு பதில் சொல்லிவிட்டு, சிறிது நேர சந்தோஷ போழுதுகளுடன் வீடு திரும்பினோம். மறக்க முடியாத பொழுதுகளின் பதிவுகள்.
அன்புடன் சஞ்சய்
பயணத்தை ஒழுங்கு செய்த நண்பர்கள்,
காரில் அழைத்து சென்ற துவாரகன் (சூட்டி) அண்ணா.
பயணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும்.(தர்சன், மர்க்சிங்,
உதயன் அண்ணா, தபோதரன்,
சுரேந்திரா அண்ணா
தங்கநேசன், ரூபன் அண்ணா,
வசீகரன், நிஷாந்தன்,
துவாரகன் அண்ணா, கௌசிகன், மீனரூபன், )
nalla payanam
ReplyDeleteNice one man ;) Keep up the good work :)
ReplyDeletethank u friends
ReplyDelete"எத்தனையோ மில்லியன் செலவால் உருவான பாலத்தை கடந்து பயணிப்பதர்ற்கு அதற்கு முன் வரும் பாதைகள் கைகொடுக்கவில்லை" unmaithan thamil
ReplyDeletephotos perisa iruntha nalla irukkum
ReplyDeletenext postila podurinkala boss
ok sir... thankx 4 ur comment
ReplyDelete