நட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அதை என்றும் அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது.
நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நடந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
காலம் கடந்தாலும் கடக்காத நட்பு, இளமை மறைந்து முதுமை விரட்டி வந்தாலும் நரைக்காதது ஆசை மட்டும் அல்ல நட்பும் தான். நட்பு என்பது பற்றி ஒரு வரைவிலக்கணம் குடுத்து அதை கமண்டலத்துக்குள் கங்கையை அடக்குவது போல் அடக்கிட முடியாது. யாராலையும் அதை புரிந்து கொள்ள முடியாது.
மனித வாழ்க்கையில் விலை மதிக்க முடியாதது நட்பு. உடலுக்கும் உயிருக்கும் துணையாகி, சுகதுக்கங்களிலே பங்கு கொள்ளும் மனப்பாண்மையே நட்பு ஆகும். நல்ல நண்பர்கள் கிடைப்பதும் அவர்களைத் தேர்ந்தெடுப்பதும் எல்லோருக்கும் சுலபமான ஒன்றல்ல. உண்மையான நட்பை நேசிப்பவனை எந்த நண்பர் / நண்பிகளும் நேசிப்பது கிடையாது. இது ஒரு வகையில் என் அனுபவமும் கூட.
ஒரு நீதிபதி தன்முன் குற்றம் சுமத்தப்பட்டு எதிரில் நிற்கும் குற்றவாளியை அவன் நிரபராதியாக இருக்கலாம் என்ற கருத்தை முன் வைத்தே விசாரணை நடத்துவார். அவன் குற்றவாளி என்று திர்ப்பை விசாரணை முடிந்த பின்னரே அறிய முடிகிறது. அதுவரையில் அந்த தீர்ப்பு தள்ளி வைக்கப்படுகிறது. அது போல, எந்த ஒரு ஆண் அல்லது பெண்ணும் தனது நண்பன் அல்லது நண்பியை புரிந்து கொள்வதில்லை.
அவ்வாறு தனது நண்பன்/ நண்பி மேல் குற்றம் பழி சுமத்தினால், அதை ஆராயாமல் முடிவெடுப்பது எங்கனம் சரியாகும்? நீங்கள் அதுவரை வைத்திருந்தது நட்பா என்ற கேள்விக்கே இடம் உண்டு. உங்கள் நண்பன்/ நண்பியை புரியாமல் இருப்பது எவ்வாறு நட்பாகும். சிறிது நேரத்தை உங்களதாக்கி யோசித்து பார்த்த பின்னே முடிவுகளை எடுங்கள்.
நட்பு இங்கு பலவாக பிரிக்கப்படுகிறது. ஆண்-ஆண் நட்பு, பெண்-பெண் நட்பு, ஆண்-பெண் நட்பு. ஆண் களின் நட்பு என்பது சுயநலம் இல்லாதது, எதையும் எதிர்பாராதது. இருபினும் உயிர் நண்பர்கள் உயிர் கொல்லும் நண்பர்களாக மாறும், மாறி விட்ட காலம். ஆண் பெண் நட்பு என்பது, இன்று பலரால் தவறாக இனம் காணப்படுகிறது. அது தவறாகும். நட்பு காதலாகலாம். ஆகாமல் விடலாம். உண்மையில் நட்புக்கும் கற்புண்டு.
நட்பு எந்த முறையிலும் உருவாகலாம். குரு-சீடன், கணவன்-மனைவி, காதலன்-காதலி, ஆசிரியர்-மாணவன், அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை அகிய எந்த முறையிலும் நட்பு உருவாகலாம்.
சிந்தனையில்லாமல் கொண்ட நட்பு, அத்தகைய நண்பர்கள் மேல் கொண்ட நம்பிக்கை பல விபரீதங்களை உலகில் விளைவித்துள்ளது. இது நாங்கள் கண்ட உண்மைகள். துரோகிகள் நட்பினால் தமது சொத்துக்களை இழந்தவர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காது. போலி நண்பர்கள் துரோகத்திற்க்கு உயிரைப் பலி கொடுத்தவர்கள்தான் கொஞ்சமா? நண்பர்கள் என்ற போலி முத்திரையில் உலவும் நயவஞ்சகர்கள் அடுத்த செக்கானில் என்ன செய்வார்கள் என்று கூட புரிந்து கொள்ள முடியாது.
எவ்வளவு ஆழமான நட்பாக இருந்தாலும் இருவருக்கிடையே தான் அது வலுவுள்ளதாக இருக்க முடியும். மூன்றாவது நபர் ஒரு நட்பில் இணைந்தால் நட்புக்கு எந்த விதத்திலேனும் கெடுதலையே விளைவாக உண்டாகிவிடும். இது எனது அனுபவத்திலும் நடந்த உண்மை. ஒருவனுக்கு எமை பிடிக்காவிடில் விலகி நடப்பின் பிரச்சனைகளை ஓரளவு குறைக்கலாம்.
அறிவோடும், விழிப்போடும் எல்லோரிடமும் அன்பாய்ப் பழகி, அகலாமலும், நெருங்காமலும் வாழ்ந்து . சுயநலத்தை பாராமல், மனதினை புரிந்து கொண்டு. உண்மையாக வாழ்வோம். ஒருவர் மனதை புண்படுத்தும் நட்பினை புறம் தள்ளி உண்மையான நட்பிற்காக போராடுவோம்.
தமிழ் நிலா .
வாழ்க நட்பு
ReplyDeletethank nanpaa
ReplyDeleteஎனக்கு நண்பர்கள் அதிகம் முன்பு இப்ப யாரும் இல்லை. எனக்கு சந்தோசம். என் என்றால் அவங்கள் உண்மையானவர்கள் இல்லை.
ReplyDeleteபெயர் குறிப்பிடாத உங்களுக்கு என் நன்றிகள்
ReplyDelete@ rajkumar உண்மையாக இருப்பவவர்களுக்கு தான் நண்பன் என்று பெயர். இல்லாவிடின் உங்களுடன் படித்தால் சகமாணவன். வேலை செய்தால் சக உத்தியோகத்தன்.
ReplyDelete