இதற்கு அடிப்படையான பெயர் தட்டை வடை. ஆனால் பருத்தித்துறை என்ற நகரம் இந்த வடையைச் செய்வதில் பிரபல்யம் என்பதால் இதற்கு பருத்தித்துறை வடை என்று ஒரு காரணப் பெயர் உண்டாகியது. நம் நாட்டு, நம் ஊர் உணவு. மிகவும் சுவையானது,
வடமராட்சி நகரத்தில் நான் வாங்கி சாப்பிட்ட வட்ட வடிவமான அமைப்பையோ, அற்புதமான சுவையையோ என்னால் எட்ட முடியாமல் இருந்தது. எங்கு செய்தாலும் அதன் சுவைக்கு வராது. அங்குள்ளவர்களின் கை பக்குவம் தனி.
(குறிப்பிட்ட அளவு செய்ய)
தேவையான பொருட்கள்
250 கிராம் உழுத்தம்பருப்பு
250 கிராம் கோதுமை மா
250 கிராம் கோதுமை மா
250 கிராம் வெள்ளை அரிசி மா
மிளகாய்த்தூள் ( உறைப்புக்கு அளவாக)
இரண்டு மேசைக்கரண்டி பெரும்சீரகம்
கறிவேப்பிலை
வெண்காயம் ஒன்று
செய்முறை

2. உழுந்துடன் கோதுமைமா, அரிசிமா, பெரும்சீரகம், மிளகாய்த்தூள், சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்ட வெண்காயம், கறிவேப்பிலை, அளவான உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
3. இப்போ கலவையில் இருந்து பாக்கு அளவிலான சிறுசிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளுங்கள்.
4. சிறு பேணியின் பின்புறத்தில் எண்ணை தடவி உருண்டைகளை பேணியின் வட்டத்தின் அளவுக்கு தட்டியெடுத்து கொதிக்கும் எண்ணையில் போட்டு எடுக்கவும்.
5. இரு கைப் பெருவிரல்களால் தட்டையாகச் செய்யவேண்டும். செய்யும்போது வலது பெருவிரலால் எண்ணையில் தொட்டு உருண்டை மேல் தொட்டுவிட்டுத் தட்டையாக்கினால் சுகமாகத் தட்டுப்படும். தட்டியதை ஓர் தட்டில் ஒன்றுடன் ஒன்று முட்டாமல் வைக்கவேண்டும். முழுவதும் செய்த பின்பு தாச்சியில் எண்ணையை விட்டு மொறுகல் நிலை வரும்வரை பொரித்து எடுக்கவும்.
6. இப்பொது தட்டைவடை தயார். (பருத்தித்துறை வடை)
குறிப்பு
பேணியில் வைத்து தட்டிப் போடுவதால் வடைகள் ஒரேயளவாக வரும். பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். எதனை ஆற விட்டு சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். நீங்களும் முயலுங்கள். உப்பு, உறைப்பு போதாது விட்டால் அடுத்த தடவை செய்யும்போது கூடுதலாகச் சேர்க்கலாம். தந்த அளவில் அரைவாசியையும் முதலில் செய்யலாம். உப்பு மேசைக்கரண்டியால் மிகவும் கும்பலாக எடுக்கவேண்டாம்.
நன்றி இணையம் + உறவினர்
நம்ம ஊரு வடை, அம்மா தர சாப்டிருக்கம் இப்ப லண்டன் ல யார் தருவாங்க?
ReplyDeleteநீங்களா நம்ம பதிவ பாத்து செய்து பாருங்க....
ReplyDelete