யாழ் கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் உலகத் தமிழர்களால் அறியப்பட்ட தமிழ் அறிஞர். மிக நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்த இவர் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் அண்மையில் தமிழகத்தில் இடம்பெற்ற செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டிருந்தவர்
என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விடயம் விமர்சனத்துக்கும் உட்பட்டு இருந்தது.
சிறந்த திறனாய்வாளராகவும் இலக்கிய விமர்சகராகவும் சமூக சிந்தனையாளராகவும் அறியப்பட்ட இவர் யாழ் பல்கலைக்கழகத்தின் சிறந்த அறிஞர். யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வருவதற்கான தகமைகளைக் கொண்டிருந்த போதும் அவருடைய சமூகப் பின்னணி காரணமாக அப்பதவி அவருக்கு கிடைக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டமை யாழ் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பலவீனங்களில் ஒன்றாகும் என பல அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விடயம் விமர்சனத்துக்கும் உட்பட்டு இருந்தது.
சிறந்த திறனாய்வாளராகவும் இலக்கிய விமர்சகராகவும் சமூக சிந்தனையாளராகவும் அறியப்பட்ட இவர் யாழ் பல்கலைக்கழகத்தின் சிறந்த அறிஞர். யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வருவதற்கான தகமைகளைக் கொண்டிருந்த போதும் அவருடைய சமூகப் பின்னணி காரணமாக அப்பதவி அவருக்கு கிடைக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டமை யாழ் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பலவீனங்களில் ஒன்றாகும் என பல அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
கார்த்திகேசு சிவத்தம்பி (கரவெட்டி, யாழ்ப்பாணம், இலங்கை),
(பிறப்பு மே 10, 1932) ஒரு முக்கிய தற்காலத் தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் மற்றும் சமூக சிந்தனையாளர் ஆவார்.
(பிறப்பு மே 10, 1932) ஒரு முக்கிய தற்காலத் தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் மற்றும் சமூக சிந்தனையாளர் ஆவார்.
பெற்றோர்: வள்ளியம்மை T.P.கார்த்திகேசு (பண்டிதர், சைவப்புலவர்)
வாழ்க்கைத் துணை: ரூபவதி நடராஜா (1963)
கல்வியும் கல்விப்பணியும்:
பிள்ளைகள்: கிரித்திகா (பெண்), தாரிணி (பெண்), வர்த்தனி (பெண்)
தொழில்: பேராசிரியர்
கல்வி:
PhD (பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகம், 1970)
MA (இலங்கைப் பல்கலைக்கழகம், 1963)
BA (இலங்கைப் பல்கலைக்கழகம், 1956)
ஸாகிராக் கல்லூரி (கொழும்பு, 1949-53)
விக்னேசுவராக் கல்லூரி (கரவெட்டி, 1948)
ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியில் கற்றார். பின்னர் இடைநிலைக் கல்லூரியை கொழும்பு ஸாகிராக் கல்லூரியில் கற்றார். ஆரம்பத்தில் கொழும்பு ஷாகிரா கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்தார்.
இலங்கையின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இளமாணிப் பட்டத்தையும், பின்னர் அதே பல்கலைக் கழகத்தில் பயின்று முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். ஐக்கிய இராச்சியத்திலுள்ள பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு முனைவர் (Ph.D) பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 1978 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார். பின்னர் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். தொடர்ந்து தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வருகைப் பேராசிரியராகவும் ஓராண்டு வரை பணி புரிந்தார். இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.
கலைப் பங்களிப்புபல்கலைக்கழக காலத்தில் மேடை நாடகங்களில் நடித்ததோடு பின்னர் வானொலி நாடகங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். இலங்கையர்கோன் எழுதிய “விதானையார் வீட்டில்” தொடர் நாடகத்தில் இவரே முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.
ஆக்கங்கள் ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை பல்வேறு துறைகளிலும், ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கியவர். இவர் முதன்மையாகப் பயின்ற துறைகளுக்குப் புறம்பாகவும் பல துறைகளில் இவர் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது ஆர்வம், தமிழ், சமயம், சமூகவியல், மானிடவியல், அரசியல், வரலாறு, கவின் கலைகள் எனப் பல்வேறு துறைகளையும் தழுவியிருந்தது. மார்க்சியச் சிந்தனைப் போக்குடைய இவர் யாழ்ப்பாணச் சமுதாயத்தின் பல்வேறு குறைபாடுகளையும் கடுமையாக விமர்சித்தார்.
இவர் பற்றிய படைப்புக்கள்:
தமிழக அரசின் திரு.வி.க. விருது அளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்ட ஈழத்தமிழ் அறிஞர் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ஆளுமை விகசிப்பின் சில ஊற்றுக்களை பதிவு செய்யும் வகையில்
‘கரவையூற்று’ எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கொழும்புக் கிளை நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘கரவையூற்று’ நூலின் தொகுப்பு ஆசிரியர் வீ.ஏ.திருஞானசுந்தரம்.
இவருடைய நூல்கள்:
இலங்கைத் தமிழர் – யார், எவர்? – நூலகம் திட்டம்
யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு – நூலகம் திட்டம்
தமிழில் இலக்கிய வரலாறு – நூலகம் திட்டம்
இலக்கணமும் சமூக உறவுகளும் – நூலகம் திட்டம்
மதமும் கவிதையும் – நூலகம் திட்டம்
தமிழ் கற்பித்தலில் உன்னதம் – நூலகம் திட்டம்
சுவாமி விபுலாநந்தரின் சிந்தனை நெறிகள் – நூலகம் திட்டம்
திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு – நூலகம் திட்டம்
தமிழ்ப் பண்பாட்டில் சினிமா (மக்கள் வெளியீடு)
பண்டைத் தமிழ்ச் சமூகம் – வரலாற்றுப் புரிதலை நோக்கி… (மக்கள் வெளியீடு)-நூலகம் திட்டம்
சிறப்புத் தேர்ச்சி:
தமிழிலக்கிய வரலாறு,இலக்கியத் திறனாய்வு ,தமிழர் சமூக வரலாறுதமிழரிடையேயான கலாசாரமும் தொடர்பாடலும்,
தமிழ் நாடகம்.
(நன்றி விக்கிபீடியா தமிழ்)

இவரது இழப்பு தமிழ் உலகத்திற்கு இழப்பு
ReplyDeleteeedu seiya mudiyaththathu...
ReplyDelete